• Apr 19 2026

மின் கட்டணத்தை குறைந்த மட்டத்தில் பேண நடவடிக்கை - அமைச்சர் நளிந்த சுட்டிக்காட்டு

Chithra / Jan 7th 2026, 9:27 am
image



மின் கட்டணத்தை முடிந்தளவு குறைந்த மட்டத்தில் பேண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இலங்கை மின்சாரசபையின் யோசனைகளை மீளாய்வு செய்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவே இறுதி தீர்மானம் எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 


மின் கட்டணம் அதிகரிக்கப்படும் போது இலங்கை மின்சாரசபை அரசாங்கத்துடையது என்றும், கட்டணம் குறைக்கப்படும் போது அது சுயாதீனமானது என்றும் சிலர் கருதுகின்றனர். இது பொறுத்தமற்றதொரு நிலைப்பாடாகும். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தையே நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.


இதேவேளை முழு கல்வி மறுசீரமைப்பு திட்டத்திலும் பாரிய தவறுகள் இடம்பெற்றிருந்தால் கல்வி அமைச்சரின் பதவி விலகல் குறித்து அவதானம் செலுத்தலாம். ஏற்பட்டுள்ள சிறிய தவறுக்காக கல்வி அமைச்சரை பதவி விலகுமாறு வலியுறுத்த முடியாது. அவர் பதவி விலய வேண்டிய தேவையும் இல்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

கல்வி மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு இரவில் தீர்மானிக்கப்பட்ட விடயமும் அல்ல. எமது கொள்கைப் பிரகடனத்திலும் கல்வி மறுசீரமைப்புக்களுக்கு பாரிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பரந்துபட்ட கலந்தாலோசனைகளின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. எனவே மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது ஏற்படும் சில சிறிய தொழிநுட்ப ரீதியான தவறுகளுக்காக முழு திட்டத்தையும் இடைநிறுத்த முடியாது. என்றார்.  

மின் கட்டணத்தை குறைந்த மட்டத்தில் பேண நடவடிக்கை - அமைச்சர் நளிந்த சுட்டிக்காட்டு மின் கட்டணத்தை முடிந்தளவு குறைந்த மட்டத்தில் பேண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இலங்கை மின்சாரசபையின் யோசனைகளை மீளாய்வு செய்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவே இறுதி தீர்மானம் எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மின் கட்டணம் அதிகரிக்கப்படும் போது இலங்கை மின்சாரசபை அரசாங்கத்துடையது என்றும், கட்டணம் குறைக்கப்படும் போது அது சுயாதீனமானது என்றும் சிலர் கருதுகின்றனர். இது பொறுத்தமற்றதொரு நிலைப்பாடாகும். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தையே நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.இதேவேளை முழு கல்வி மறுசீரமைப்பு திட்டத்திலும் பாரிய தவறுகள் இடம்பெற்றிருந்தால் கல்வி அமைச்சரின் பதவி விலகல் குறித்து அவதானம் செலுத்தலாம். ஏற்பட்டுள்ள சிறிய தவறுக்காக கல்வி அமைச்சரை பதவி விலகுமாறு வலியுறுத்த முடியாது. அவர் பதவி விலய வேண்டிய தேவையும் இல்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு இரவில் தீர்மானிக்கப்பட்ட விடயமும் அல்ல. எமது கொள்கைப் பிரகடனத்திலும் கல்வி மறுசீரமைப்புக்களுக்கு பாரிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பரந்துபட்ட கலந்தாலோசனைகளின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. எனவே மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது ஏற்படும் சில சிறிய தொழிநுட்ப ரீதியான தவறுகளுக்காக முழு திட்டத்தையும் இடைநிறுத்த முடியாது. என்றார்.  

Advertisement

Advertisement

Advertisement