மஹியங்கனை - கிராந்துருகோட்டே வீதியின் 3ஆம் கட்டை பகுதியில் நேற்று (27) இரவு இடம்பெற்ற கொடூரமான வீதி விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
கிராந்துருகோட்டை நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் நேரடியாக மோதியதில் இந்த விபத்து நடந்தது.
விபத்தில் காயமடைந்த உழவு இயந்திர சாரதி, கெப் வாகன சாரதி மற்றும் வாகனத்தில் பயணித்த 7 பேர் உட்பட மொத்தம் 9 பேர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 57 மற்றும் 44 வயதுடைய தம்பதியினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மஹியங்கனை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
மஹியங்கனையில் விபத்து – தம்பதியினர் உயிரிழப்பு மஹியங்கனை - கிராந்துருகோட்டே வீதியின் 3ஆம் கட்டை பகுதியில் நேற்று (27) இரவு இடம்பெற்ற கொடூரமான வீதி விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.கிராந்துருகோட்டை நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் நேரடியாக மோதியதில் இந்த விபத்து நடந்தது.விபத்தில் காயமடைந்த உழவு இயந்திர சாரதி, கெப் வாகன சாரதி மற்றும் வாகனத்தில் பயணித்த 7 பேர் உட்பட மொத்தம் 9 பேர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 57 மற்றும் 44 வயதுடைய தம்பதியினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மஹியங்கனை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.