• Apr 20 2026

தண்டவாளத்தின் நடுவே நின்ற பட்டாவை தட்டி தூக்கிய ரயில்; உயிரை காக்க பாய்ந்து ஓடிய சாரதியின் பதறவைக்கும் காட்சி!

shanu / Oct 4th 2025, 7:59 pm
image

பட்டா ரக வாகனமொன்றை ரயில் மோதித் தள்ளிய வேளையில் உயிரைக் காக்க பட்டா வாகனத்தின் சாரதி  பாய்ந்து  ஓடியுள்ளார். 


இந்த விபத்துச் சம்பவம் இன்று (04) காலை காலி அஹங்கம-கபலானை ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. 


மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற ரயில் அஹங்கம-கபலானை ரயில் கடவையை நெருங்கியது. அப்போது குறித்த கடவையில் பட்டா ரக வாகனம் பயணித்தது. 


ரயில் நெருங்கியது தெரிந்தும் பட்டா ரக வாகனம் குறித்த ரயில் கடவையைக் கடந்து செல்லலாம் என்ற நோக்கில் பயணித்தது. 


எனினும் ரயில் கடவையை நெருங்கியவுடன் பட்டாவை விட்டு இறங்கி சாரதி பாய்ந்து ஓடியுள்ளார்.


பட்டா சாரதி இறங்கி ஓடிய கணப்பொழுதில் ரயில் பட்டாவை மோதித் தள்ளிச் சென்றுள்ளது. ரயிலை அருகில் கண்டதும் பீதியில் உறைந்த சாரதி உயிரைக் காக்க பட்டாவை விட்டு இறங்கி பாய்ந்து  ஓடியுள்ளார். 


எனினும் சாரதி இறங்கி ஓடிய போது ரயில் பட்டாவை மோதித் தள்ளியதில் பட்டா வாகனம் சிதறி ஆங்காங்கே கிடந்துள்ளது. 


ரயிலுக்கு அருகில் அவர் இறங்கி ஓடி அருகே விழுந்துள்ளார். அதன்போது அவர் காயமடைந்துள்ளார். 


காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


பட்டாவை ரயில் மோதித் தள்ளிய வேளையில் உயிரைக் கையில் பிடித்தவாறு பட்டா சாரதி வாகனத்தை விட்டு இறங்கி பாய்ந்து ஓடியுள்ள சம்பவம் காணொளியாக வெளிவந்து ஒருகணம் பதறவைத்துள்ளது.

தண்டவாளத்தின் நடுவே நின்ற பட்டாவை தட்டி தூக்கிய ரயில்; உயிரை காக்க பாய்ந்து ஓடிய சாரதியின் பதறவைக்கும் காட்சி பட்டா ரக வாகனமொன்றை ரயில் மோதித் தள்ளிய வேளையில் உயிரைக் காக்க பட்டா வாகனத்தின் சாரதி  பாய்ந்து  ஓடியுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று (04) காலை காலி அஹங்கம-கபலானை ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற ரயில் அஹங்கம-கபலானை ரயில் கடவையை நெருங்கியது. அப்போது குறித்த கடவையில் பட்டா ரக வாகனம் பயணித்தது. ரயில் நெருங்கியது தெரிந்தும் பட்டா ரக வாகனம் குறித்த ரயில் கடவையைக் கடந்து செல்லலாம் என்ற நோக்கில் பயணித்தது. எனினும் ரயில் கடவையை நெருங்கியவுடன் பட்டாவை விட்டு இறங்கி சாரதி பாய்ந்து ஓடியுள்ளார்.பட்டா சாரதி இறங்கி ஓடிய கணப்பொழுதில் ரயில் பட்டாவை மோதித் தள்ளிச் சென்றுள்ளது. ரயிலை அருகில் கண்டதும் பீதியில் உறைந்த சாரதி உயிரைக் காக்க பட்டாவை விட்டு இறங்கி பாய்ந்து  ஓடியுள்ளார். எனினும் சாரதி இறங்கி ஓடிய போது ரயில் பட்டாவை மோதித் தள்ளியதில் பட்டா வாகனம் சிதறி ஆங்காங்கே கிடந்துள்ளது. ரயிலுக்கு அருகில் அவர் இறங்கி ஓடி அருகே விழுந்துள்ளார். அதன்போது அவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பட்டாவை ரயில் மோதித் தள்ளிய வேளையில் உயிரைக் கையில் பிடித்தவாறு பட்டா சாரதி வாகனத்தை விட்டு இறங்கி பாய்ந்து ஓடியுள்ள சம்பவம் காணொளியாக வெளிவந்து ஒருகணம் பதறவைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement