அமெரிக்கா - பாஸ்டன் மாரத்தானில் மயங்கிய விழுந்த வீரரை, சக வீரர்கள் இணைந்து தூக்கிக் கொண்டு இலக்கைக் கடந்த நெகிழ்ச்சிச் சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
பாஸ்டன் மாரத்தானின் போது ஓடிக்கொண்டிருந்திருந்த வீரர் திடீரென மயங்கி விழுந்தார். இலக்கைக்கடக்க குறுகிய தூரம் இருந்ததால் அவர் எழுந்து ஓடுவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார்.
எனினும் கடுமையான தசைப்பிடிப்பால் மீண்டும் தரையில் சரிந்து விழுந்தார். கிழே விழுந்த அவர் எழுந்து ஓட முயற்சி செய்வதைப் பல வீரர்கள் அவதானித்தும் உதவாமல் சென்றுள்ளனர்.
ஆனால் அவருடன் ஓடிக்கொண்டிருந்த இரண்டு போட்டியாளர்கள், தங்கள் ஓட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவருக்கு உதவி செய்தனர்.
அவர் தொடர்ந்து ஓடுவதற்காக அவர்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்தி, அவரைத் தூக்கி, தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.
இந்த நெகிழ்ச்சியான தருணம் காணொளியாக வெளிவந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி தற்போது வைரலாகி வருகின்றது.
காணொளியைப் பார்த்த பலரும் இவர்கள் போட்டி மனப்பான்மை கொண்ட ஓட்டப்பந்தய வீரர்கள். இலக்குக்கு இவ்வளவு அருகில் சென்றும் வேகம், நேரம் மற்றும் நிலையைத் தியாகம் செய்வது ஒரு எளிதான தேர்வு அல்ல. என்றவாறாக கருத்துக்களைப் பதிவு செய்து குறித்த வீரர்களுக்கு பாராட்டையும் ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.
மாரத்தானில் மயங்கிய வீரர் - வெற்றி,தோல்வியைத் தாண்டி வென்ற மனித நேயம் அமெரிக்கா - பாஸ்டன் மாரத்தானில் மயங்கிய விழுந்த வீரரை, சக வீரர்கள் இணைந்து தூக்கிக் கொண்டு இலக்கைக் கடந்த நெகிழ்ச்சிச் சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. பாஸ்டன் மாரத்தானின் போது ஓடிக்கொண்டிருந்திருந்த வீரர் திடீரென மயங்கி விழுந்தார். இலக்கைக்கடக்க குறுகிய தூரம் இருந்ததால் அவர் எழுந்து ஓடுவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார். எனினும் கடுமையான தசைப்பிடிப்பால் மீண்டும் தரையில் சரிந்து விழுந்தார். கிழே விழுந்த அவர் எழுந்து ஓட முயற்சி செய்வதைப் பல வீரர்கள் அவதானித்தும் உதவாமல் சென்றுள்ளனர். ஆனால் அவருடன் ஓடிக்கொண்டிருந்த இரண்டு போட்டியாளர்கள், தங்கள் ஓட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவருக்கு உதவி செய்தனர். அவர் தொடர்ந்து ஓடுவதற்காக அவர்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்தி, அவரைத் தூக்கி, தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.இந்த நெகிழ்ச்சியான தருணம் காணொளியாக வெளிவந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி தற்போது வைரலாகி வருகின்றது. காணொளியைப் பார்த்த பலரும் இவர்கள் போட்டி மனப்பான்மை கொண்ட ஓட்டப்பந்தய வீரர்கள். இலக்குக்கு இவ்வளவு அருகில் சென்றும் வேகம், நேரம் மற்றும் நிலையைத் தியாகம் செய்வது ஒரு எளிதான தேர்வு அல்ல. என்றவாறாக கருத்துக்களைப் பதிவு செய்து குறித்த வீரர்களுக்கு பாராட்டையும் ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.