• May 23 2026

மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த நபர்.! திவுலபிட்டியாவில் சோகம்

Aathira / May 23rd 2026, 8:40 am
image

நாட்டில் நிலவும் கடுமையான அனர்த்த நிலைமையினால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (22) 64 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வெள்ளநீர் திடீரென அதிகரித்ததால் அந்த நபர் சிக்கிக்கொண்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் கனமழை மற்றும் வெள்ள நிலைமையால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்

மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த நபர். திவுலபிட்டியாவில் சோகம் நாட்டில் நிலவும் கடுமையான அனர்த்த நிலைமையினால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (22) 64 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.வெள்ளநீர் திடீரென அதிகரித்ததால் அந்த நபர் சிக்கிக்கொண்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நாட்டின் பல பகுதிகளில் தொடரும் கனமழை மற்றும் வெள்ள நிலைமையால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement