• Oct 19 2026

உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; ஒக்டோபர் 30 வரை இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து

Chithra / Oct 18th 2026, 4:31 pm
image


இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.


குறிப்பாக, வங்காள விரிகுடாவில் உருவாகக்கூடிய புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி முல்லைத்தீவுக்கு வடகிழக்குத் திசையில், வடக்கு மாகாணத்தை அண்மித்த பகுதியில் தற்காலிக வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்துவரும் மழை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேவேளை, ஒக்டோபர் 23ஆம் திகதி மத்திய வங்காள விரிகுடாவில் மற்றுமொரு காற்றுச் சுழற்சி உருவாகக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், அது 26ஆம் திகதியளவில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்தப் புயல் எதிர்வரும் 29ஆம் திகதி இரவு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனகாபள்ளி மாவட்டத்தின் ராம்பில்லி பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும் என தற்போதைய வானிலை மாதிரிகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.


எனினும், இது தற்போதைய நிலவரத்தின் அடிப்படையிலான முன்னறிவிப்பு என்பதால், புயலின் பாதை மற்றும் தீவிரத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.


குறித்த புயலினால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அதன் மறைமுகத் தாக்கத்தால் நாட்டின் பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக, எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, கொழும்பு, கேகாலை, களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய 18 மாவட்டங்களின் பல பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும்.


குறிப்பாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இக்காலப்பகுதியில் மிகக் கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனால் குறித்த மூன்று மாகாணங்களிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பேராசிரியர் பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.


அத்துடன், ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், தாழ்நிலப் பகுதிகளில் சில இடங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.


இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


புயலின் தாக்கத்தால் கடல் அலைகளின் உயரம் அதிகரித்து, கடற்பரப்பில் ஆபத்தான நிலைமைகள் உருவாகக்கூடும் என்பதால், குறித்த காலப்பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பேராசிரியர் பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.


மேலும், எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி அரபிக்கடலிலும் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், எனினும் அது வலுப்பெறுவதற்கான சாதகமான சூழல் தற்போது காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; ஒக்டோபர் 30 வரை இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.குறிப்பாக, வங்காள விரிகுடாவில் உருவாகக்கூடிய புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி முல்லைத்தீவுக்கு வடகிழக்குத் திசையில், வடக்கு மாகாணத்தை அண்மித்த பகுதியில் தற்காலிக வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்துவரும் மழை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை, ஒக்டோபர் 23ஆம் திகதி மத்திய வங்காள விரிகுடாவில் மற்றுமொரு காற்றுச் சுழற்சி உருவாகக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், அது 26ஆம் திகதியளவில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தப் புயல் எதிர்வரும் 29ஆம் திகதி இரவு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனகாபள்ளி மாவட்டத்தின் ராம்பில்லி பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும் என தற்போதைய வானிலை மாதிரிகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.எனினும், இது தற்போதைய நிலவரத்தின் அடிப்படையிலான முன்னறிவிப்பு என்பதால், புயலின் பாதை மற்றும் தீவிரத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறித்த புயலினால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அதன் மறைமுகத் தாக்கத்தால் நாட்டின் பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, கொழும்பு, கேகாலை, களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய 18 மாவட்டங்களின் பல பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும்.குறிப்பாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இக்காலப்பகுதியில் மிகக் கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனால் குறித்த மூன்று மாகாணங்களிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பேராசிரியர் பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.அத்துடன், ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், தாழ்நிலப் பகுதிகளில் சில இடங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.புயலின் தாக்கத்தால் கடல் அலைகளின் உயரம் அதிகரித்து, கடற்பரப்பில் ஆபத்தான நிலைமைகள் உருவாகக்கூடும் என்பதால், குறித்த காலப்பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பேராசிரியர் பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.மேலும், எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி அரபிக்கடலிலும் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், எனினும் அது வலுப்பெறுவதற்கான சாதகமான சூழல் தற்போது காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement