• Apr 20 2026

மதிலை உடைத்துக்கொண்டு வளவுக்குள் புகுந்த லொறி; மட்டக்களப்பில் நள்ளிரவில் விபத்து

Chithra / Nov 16th 2025, 8:39 am
image

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கல்முனை சாலை வழியே குருநாகலில் இருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்று செட்டிபாளையம் பிரதான வீதியால் பயணிக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வளவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளது. 

இப் பிரதேசத்தில் மழையுடனான வானிலை நிலவிவரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மருதமுனை வெதுப்பகம் ஒன்றிற்கு சொந்தமான வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.  

குறித்த வாகனத்தில் விபத்து சம்பவித்த சமயம் மருதமுனையைச் சேர்ந்த இருவர் பயணித்துள்ளதுடன் தெய்வாதீனமாக அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 

வீட்டு மதிலும் வீட்டின் சில உடமைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதுடன் லொறியின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


மதிலை உடைத்துக்கொண்டு வளவுக்குள் புகுந்த லொறி; மட்டக்களப்பில் நள்ளிரவில் விபத்து மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கல்முனை சாலை வழியே குருநாகலில் இருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்று செட்டிபாளையம் பிரதான வீதியால் பயணிக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வளவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளது. இப் பிரதேசத்தில் மழையுடனான வானிலை நிலவிவரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.மருதமுனை வெதுப்பகம் ஒன்றிற்கு சொந்தமான வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.  குறித்த வாகனத்தில் விபத்து சம்பவித்த சமயம் மருதமுனையைச் சேர்ந்த இருவர் பயணித்துள்ளதுடன் தெய்வாதீனமாக அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வீட்டு மதிலும் வீட்டின் சில உடமைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதுடன் லொறியின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement