• Jun 18 2026

400 பூனைகளை வேட்டையாடிய கும்பல்-இறைச்சியாக மாற இருந்த உயிர்கள்!

Ziya / Jun 17th 2026, 2:56 pm
image

வியட்நாமில் இறைச்சி விற்பனைக்காகக் கடத்திச் செல்லப்படவிருந்த 400-க்கும் மேற்பட்ட உயிருள்ள பூனைகளை அந்நாட்டுப் போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர். 


செல்லப்பிராணிகள் திருடப்படுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் ஒரு பெரிய குற்றக் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.


ஹோ சி மின் (Ho Chi Minh) நகரப் பகுதியில் கடந்த சில மாதங்களாகச் செல்லப் பிராணிகள், குறிப்பாகப் பூனைகள் மாயமாவது அதிகரித்துள்ளது.


இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த வியட்நாம் பொலிஸார், தெற்கு வியட்நாம் முழுவதும் பூனைகளை ஆசை காட்டிப் பிடித்துத் திருடி வந்த 9 பேர் கொண்ட கும்பலை அண்மையில் கைது செய்துள்ளது.


கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, இறைச்சிக்காக வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படவிருந்த 400-க்கும் மேற்பட்ட உயிருள்ள பூனைகள் மீட்கப்பட்டன. அத்துடன், ஏற்கனவே கொல்லப்பட்டுப் பனிக்கட்டியில்  வைக்கப்பட்டிருந்த 80 பூனைகளின் உடல்களும், வேறொரு இடத்திலிருந்து 21 பூனைகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.


மீட்கப்பட்ட பூனைகளில் பல, கடத்தல்காரர்களால் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டுப் பல நாட்களாகக் கடுமையான சித்திரவதைகளைச் சந்தித்திருந்தன. இதன் காரணமாக, மீட்கப்பட்ட பூனைகளில் சுமார் 100 பூனைகள் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.


எனினும், சர்வதேச விலங்குகள் நல அமைப்பான 'ஹ்யூமன் வேர்ல்ட் ஃபார் அனிமல்ஸ்' (Human World for Animals) எடுத்த விரைவான முயற்சியால், மீட்கப்பட்ட பூனைகளில் 40-க்கும் மேற்பட்ட பூனைகள் அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.


400 பூனைகளை வேட்டையாடிய கும்பல்-இறைச்சியாக மாற இருந்த உயிர்கள் வியட்நாமில் இறைச்சி விற்பனைக்காகக் கடத்திச் செல்லப்படவிருந்த 400-க்கும் மேற்பட்ட உயிருள்ள பூனைகளை அந்நாட்டுப் போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர். செல்லப்பிராணிகள் திருடப்படுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் ஒரு பெரிய குற்றக் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.ஹோ சி மின் (Ho Chi Minh) நகரப் பகுதியில் கடந்த சில மாதங்களாகச் செல்லப் பிராணிகள், குறிப்பாகப் பூனைகள் மாயமாவது அதிகரித்துள்ளது.இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த வியட்நாம் பொலிஸார், தெற்கு வியட்நாம் முழுவதும் பூனைகளை ஆசை காட்டிப் பிடித்துத் திருடி வந்த 9 பேர் கொண்ட கும்பலை அண்மையில் கைது செய்துள்ளது.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, இறைச்சிக்காக வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படவிருந்த 400-க்கும் மேற்பட்ட உயிருள்ள பூனைகள் மீட்கப்பட்டன. அத்துடன், ஏற்கனவே கொல்லப்பட்டுப் பனிக்கட்டியில்  வைக்கப்பட்டிருந்த 80 பூனைகளின் உடல்களும், வேறொரு இடத்திலிருந்து 21 பூனைகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.மீட்கப்பட்ட பூனைகளில் பல, கடத்தல்காரர்களால் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டுப் பல நாட்களாகக் கடுமையான சித்திரவதைகளைச் சந்தித்திருந்தன. இதன் காரணமாக, மீட்கப்பட்ட பூனைகளில் சுமார் 100 பூனைகள் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.எனினும், சர்வதேச விலங்குகள் நல அமைப்பான 'ஹ்யூமன் வேர்ல்ட் ஃபார் அனிமல்ஸ்' (Human World for Animals) எடுத்த விரைவான முயற்சியால், மீட்கப்பட்ட பூனைகளில் 40-க்கும் மேற்பட்ட பூனைகள் அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement