• Oct 06 2026

யாழ். மக்களை அச்சுறுத்தும் கும்பல்; இரவுவேளைகளில் நடக்கும் பயங்கரம்

Chithra / Oct 6th 2026, 11:17 am
image


யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றில் சிலர் ஒன்றுகூடி போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதுடன், சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதன் காரணமாக மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கும் இடையூறுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், மோட்டார் சைக்கிள்களை ஆபத்தான முறையில் செலுத்துதல், கூச்சலிடுதல், வீதியில் பயணிப்பவர்களை வழிமறித்தல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் அப்பகுதியின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் குறித்த குழுவினர் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த விடயம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


எனவே, மாதகல் – சகாயபுரம் பகுதியில் நிலவும் இந்த நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


யாழ். மக்களை அச்சுறுத்தும் கும்பல்; இரவுவேளைகளில் நடக்கும் பயங்கரம் யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றில் சிலர் ஒன்றுகூடி போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதுடன், சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதன் காரணமாக மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கும் இடையூறுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், மோட்டார் சைக்கிள்களை ஆபத்தான முறையில் செலுத்துதல், கூச்சலிடுதல், வீதியில் பயணிப்பவர்களை வழிமறித்தல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் அப்பகுதியின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் குறித்த குழுவினர் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த விடயம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, மாதகல் – சகாயபுரம் பகுதியில் நிலவும் இந்த நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement