நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள கிரகரி வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக நுவரெலியா பொலிஸாருக்கு இன்று (06) தகவல் கிடைத்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், இதுவரை அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் வாவியில் மிதப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர்,
அதனை வாவியில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது வேறு நபர்களால் கொலை செய்யப்பட்டு சடலம் வாவியில் வீசப்பட்டதா என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மரண விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரகரி வாவியில் மிதந்த சடலம். அதிர்ச்சியளிக்கும் பின்னணி என்ன நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள கிரகரி வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக நுவரெலியா பொலிஸாருக்கு இன்று (06) தகவல் கிடைத்துள்ளது.பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், இதுவரை அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் வாவியில் மிதப்பதை அவதானித்துள்ளனர்.இதனையடுத்து, நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர், அதனை வாவியில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது வேறு நபர்களால் கொலை செய்யப்பட்டு சடலம் வாவியில் வீசப்பட்டதா என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மரண விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.