மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடித்த ‘விருஷபா’ (Vrusshabha) திரைப்படம் ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவாகி, உலகம் முழுவதும் ரூ.2 கோடி மட்டுமே வசூலித்து, கடந்த ஆண்டின் பெரும் தோல்விப் படமாக இந்தப் படம் அமைந்தது.
சூப்பர் ஸ்டார் நடிகர் நடித்திருந்தாலும், அந்தப் படத்தை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
சினிமா என்பது மாய வலை. இதில் எந்த படம் எதிர்பாராத வகையில் வெற்றி பெறும், எது தோல்வியடையும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது.
சில நேரங்களில் சாதாரணமாக கருதப்படும் படங்கள் பெரிய லாபத்தைத் தரும். ஆனால், பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகும் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ரூ.70 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், வெறும் ரூ.2 கோடி வசூலித்து பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
மலையாள சினிமாவில் முக்கியமான முயற்சி என விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் படம், வெளியானதே பலருக்குத் தெரியாத அளவுக்கு கவனத்தைப் பெறவில்லை.
மோகன்லாலின் ‘எம்புரான்’ படம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ‘விருஷபா’வும் அதே அளவிலான வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை நந்தா கிஷோர் இயக்கியிருந்தார். சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். ‘ஜனநாயகன்’ போன்ற படங்களை தயாரித்த கேவின் புரொடக்ஷன் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது.
மோகன்லால் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம், பெரிய அளவிலான புரமோஷன் இல்லாமல் வெளியானது. முதல் நாளில் வெறும் ரூ.60 லட்சம் மட்டுமே வசூலித்தது. அதன் பின்னர் வசூல் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படவில்லை.
இதன் காரணமாக, கேரளாவின் பல திரையரங்குகளில் ஆறு நாட்களிலேயே படம் திரையிடலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தமாக, உலகளவில் ரூ.2 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
ரூ.70 கோடி பட்ஜெட்டில் ரூ.2 கோடி வசூல் என்பதால், கடந்த ஆண்டில் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்த படங்களின் பட்டியலில் ‘விருஷபா’ முதலிடத்தை பிடித்துள்ளது. மோகன்லால் நடித்திருந்தாலும், பலவீனமான திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கத் தவறியதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, இந்தப் படத்தை வாங்க எந்த ஓடிடி நிறுவனமும் முன்வரவில்லை. தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
70 கோடி செலவு; சூப்பர் ஸ்டாரையும் தோற்கடித்த பெரும் தோல்விப் படம் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடித்த ‘விருஷபா’ (Vrusshabha) திரைப்படம் ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவாகி, உலகம் முழுவதும் ரூ.2 கோடி மட்டுமே வசூலித்து, கடந்த ஆண்டின் பெரும் தோல்விப் படமாக இந்தப் படம் அமைந்தது. சூப்பர் ஸ்டார் நடிகர் நடித்திருந்தாலும், அந்தப் படத்தை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.சினிமா என்பது மாய வலை. இதில் எந்த படம் எதிர்பாராத வகையில் வெற்றி பெறும், எது தோல்வியடையும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. சில நேரங்களில் சாதாரணமாக கருதப்படும் படங்கள் பெரிய லாபத்தைத் தரும். ஆனால், பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகும் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ரூ.70 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், வெறும் ரூ.2 கோடி வசூலித்து பெரும் இழப்பை சந்தித்துள்ளது.மலையாள சினிமாவில் முக்கியமான முயற்சி என விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் படம், வெளியானதே பலருக்குத் தெரியாத அளவுக்கு கவனத்தைப் பெறவில்லை.மோகன்லாலின் ‘எம்புரான்’ படம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ‘விருஷபா’வும் அதே அளவிலான வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை நந்தா கிஷோர் இயக்கியிருந்தார். சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். ‘ஜனநாயகன்’ போன்ற படங்களை தயாரித்த கேவின் புரொடக்ஷன் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது.மோகன்லால் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம், பெரிய அளவிலான புரமோஷன் இல்லாமல் வெளியானது. முதல் நாளில் வெறும் ரூ.60 லட்சம் மட்டுமே வசூலித்தது. அதன் பின்னர் வசூல் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படவில்லை. இதன் காரணமாக, கேரளாவின் பல திரையரங்குகளில் ஆறு நாட்களிலேயே படம் திரையிடலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தமாக, உலகளவில் ரூ.2 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.ரூ.70 கோடி பட்ஜெட்டில் ரூ.2 கோடி வசூல் என்பதால், கடந்த ஆண்டில் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்த படங்களின் பட்டியலில் ‘விருஷபா’ முதலிடத்தை பிடித்துள்ளது. மோகன்லால் நடித்திருந்தாலும், பலவீனமான திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கத் தவறியதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, இந்தப் படத்தை வாங்க எந்த ஓடிடி நிறுவனமும் முன்வரவில்லை. தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.