• Sep 01 2026

6 வயது சிறுமி கொலை வழக்கு-தப்பியோடிய சந்தேகநபர் சுட்டுக்கொலை

Ziya / Aug 31st 2026, 5:01 pm
image


உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா அருகே 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.


ஹல்டோனி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். 


நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.


இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.


 அதில், தில்பட்டா கிராமத்தைச் சேர்ந்த பல்ராஜ் என்பவர் சிறுமியை அழைத்துச் செல்வதும், பின்னர் சாக்குமூட்டையுடன் வயல்வெளி நோக்கிச் செல்வதும் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் பல்ராஜை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். 


அவரது தகவலின் பேரில் வயல்வெளியில் தேடுதல் மேற்கொண்டபோது, சாக்குமூட்டைக்குள் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.


சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே பாலியல் வன்கொடுமை மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையில், மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கத்தியை மீட்பதற்காக போலீஸார் பல்ராஜை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதையடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்ராஜ் உயிரிழந்தார்.


சிறுமியின் கொலை மற்றும் அதனைத் தொடர்ந்து சந்தேகநபர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 வயது சிறுமி கொலை வழக்கு-தப்பியோடிய சந்தேகநபர் சுட்டுக்கொலை உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா அருகே 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.ஹல்டோனி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தில்பட்டா கிராமத்தைச் சேர்ந்த பல்ராஜ் என்பவர் சிறுமியை அழைத்துச் செல்வதும், பின்னர் சாக்குமூட்டையுடன் வயல்வெளி நோக்கிச் செல்வதும் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் பல்ராஜை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரது தகவலின் பேரில் வயல்வெளியில் தேடுதல் மேற்கொண்டபோது, சாக்குமூட்டைக்குள் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே பாலியல் வன்கொடுமை மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கத்தியை மீட்பதற்காக போலீஸார் பல்ராஜை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதையடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்ராஜ் உயிரிழந்தார்.சிறுமியின் கொலை மற்றும் அதனைத் தொடர்ந்து சந்தேகநபர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement