கடலில் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செப்டம்பர் 11ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய கடற்பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், இந்த சுற்றிவளைப்புகளில் சிக்கியவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்தான் முக்கியமானவை.
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல், சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பின்பற்றுதல் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, வாகரை, மூதூர், கிண்ணியா, நிலாவெளி, யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, மன்னார் தாவுல்பாடு உள்ளிட்ட பல கடற்கரைப் பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
மொத்தமாக 59 பேர் கைது செய்யப்பட்டதுடன், 23 டிங்கி ரக மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஒரே மாதத்தில் 59 பேர் கைது – 23 படகுகள் பறிமுதல்: கடலில் என்ன நடந்தது கடலில் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.செப்டம்பர் 11ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய கடற்பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஆனால், இந்த சுற்றிவளைப்புகளில் சிக்கியவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்தான் முக்கியமானவை.தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல், சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பின்பற்றுதல் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருகோணமலை, வாகரை, மூதூர், கிண்ணியா, நிலாவெளி, யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, மன்னார் தாவுல்பாடு உள்ளிட்ட பல கடற்கரைப் பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.மொத்தமாக 59 பேர் கைது செய்யப்பட்டதுடன், 23 டிங்கி ரக மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டவர்கள், படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.