மகாவலி கங்கையின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மகாவலி கங்கையின் சில பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விரைவில் வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெதுரு ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணி நேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை 2025.12.01 அன்று மதியம் 12.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், அப்பாதையூடாக போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு இரணைமடுக் குளத்தின் நீரேந்துப் பகுதிகளுக்குக் கிடைத்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைப்பு எடுத்துள்ள நிலையில், குறித்த பகுதியில் வௌ்ளம் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
48 மணிநேரத்திற்கு அதி வெள்ளஅபாய எச்சரிக்கை வெளியேறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் மகாவலி கங்கையின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி மகாவலி கங்கையின் சில பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விரைவில் வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தெதுரு ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணி நேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த எச்சரிக்கை 2025.12.01 அன்று மதியம் 12.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், அப்பாதையூடாக போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்தோடு இரணைமடுக் குளத்தின் நீரேந்துப் பகுதிகளுக்குக் கிடைத்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைப்பு எடுத்துள்ள நிலையில், குறித்த பகுதியில் வௌ்ளம் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.