2026 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக உரிமைக்காக போராடும் ஆண்டாகவே இருக்கும் அதனை ஓர் இனமாக ஒன்றிணைந்தது முன்னெடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சி அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அவரது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்
எமது அன்பான உறவுகள் அனைவருக்கும் இன்று பிறக்கும் 2026ஆம் ஆண்டிற்கான எமது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்றுடன் கடந்து செல்லும் 2025 ஆம் ஆண்டு பல வகையில் ஏமாற்றம் அளிக்கும் ஆண்டாக மட்டுமன்றி மிகப்பெரிய அனர்த்தத்தின் மூலம் பாரிய உயிர் இழப்புகளையும், இடப்பெயர்வுகளையும் சொத்து அழிவுகளையும் ஏற்படுத்தி விட்டு செல்கிறது.
நாடு பூராவும் இந்த டித்வா புயல் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் இன மத வேறுபாடின்றி கூடுதலாக பாதிகப்பட்டவர்கள் மலையக உறவுகளே.
அவர்கள் அனைவரும் தமது தாயகத்தில் மீண்டும் நில உரிமையோடும், குடியிருப்பு உரிமையோடும் வாழ்வாதார வசதிகள் அனைத்துடனும் மீண்டு உயர்ந்திட பிரார்த்திக்கிறோம்.
அதே நேரம் தவறான நட்புகளால் தடம் மாறி போதை பொருட்பாவனைக்கு பழக்கப் பட்ட எமது இளம் சந்ததியினர் அதில் இருந்து விடுபட்டு தமிழ் தேசிய இனத்தின் பெருமைக்கு உரியவராக மாற வேண்டும் எனவும் இவர்களை நல்வழிபடுத்தும் பணியை ஏனைய இளையோர் முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரர்த்திக்கிறேன்.
நாங்கள் 5000 ஆண்டுகளுக்கு மேலான மொழி,மற்றும் கலாசார வரலாற்று பெருமை உடையவர்கள் என்ற இறுமாப்பை சுமப்பவர்களாக எமது இளைய சமுதாயம் மிளிர வேண்டும்.
2026 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக உரிமைக்காக போராடும் ஆண்டாகவே இருக்கும் அதனை ஓர் இனமாக ஒன்றிணைந்தது முன்னெடுப்போம்.
நல்லதே நடக்க பிரார்த்தித்து இந்த புத்தாண்டு எல்லோர்க்கும் எல்லா சிறப்பும் செழிப்பும் தருவதாக அமைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு அரசியல் ரீதியாக உரிமைக்காக போராடும் ஆண்டாக இருக்கும் சீ.வீ.கே.சிவஞானம் 2026 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக உரிமைக்காக போராடும் ஆண்டாகவே இருக்கும் அதனை ஓர் இனமாக ஒன்றிணைந்தது முன்னெடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சி அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அவரது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில் எமது அன்பான உறவுகள் அனைவருக்கும் இன்று பிறக்கும் 2026ஆம் ஆண்டிற்கான எமது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நேற்றுடன் கடந்து செல்லும் 2025 ஆம் ஆண்டு பல வகையில் ஏமாற்றம் அளிக்கும் ஆண்டாக மட்டுமன்றி மிகப்பெரிய அனர்த்தத்தின் மூலம் பாரிய உயிர் இழப்புகளையும், இடப்பெயர்வுகளையும் சொத்து அழிவுகளையும் ஏற்படுத்தி விட்டு செல்கிறது.நாடு பூராவும் இந்த டித்வா புயல் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் இன மத வேறுபாடின்றி கூடுதலாக பாதிகப்பட்டவர்கள் மலையக உறவுகளே. அவர்கள் அனைவரும் தமது தாயகத்தில் மீண்டும் நில உரிமையோடும், குடியிருப்பு உரிமையோடும் வாழ்வாதார வசதிகள் அனைத்துடனும் மீண்டு உயர்ந்திட பிரார்த்திக்கிறோம்.அதே நேரம் தவறான நட்புகளால் தடம் மாறி போதை பொருட்பாவனைக்கு பழக்கப் பட்ட எமது இளம் சந்ததியினர் அதில் இருந்து விடுபட்டு தமிழ் தேசிய இனத்தின் பெருமைக்கு உரியவராக மாற வேண்டும் எனவும் இவர்களை நல்வழிபடுத்தும் பணியை ஏனைய இளையோர் முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரர்த்திக்கிறேன்.நாங்கள் 5000 ஆண்டுகளுக்கு மேலான மொழி,மற்றும் கலாசார வரலாற்று பெருமை உடையவர்கள் என்ற இறுமாப்பை சுமப்பவர்களாக எமது இளைய சமுதாயம் மிளிர வேண்டும். 2026 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக உரிமைக்காக போராடும் ஆண்டாகவே இருக்கும் அதனை ஓர் இனமாக ஒன்றிணைந்தது முன்னெடுப்போம்.நல்லதே நடக்க பிரார்த்தித்து இந்த புத்தாண்டு எல்லோர்க்கும் எல்லா சிறப்பும் செழிப்பும் தருவதாக அமைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.