மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 24 ம் திகதி காலை 6 மணி முதல் இன்று 25 ம் திகதி காலை 6 மணி வரை 132 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டி நிலையில் உள்ளது இன்னும் 3 அடி மட்டுமே நிறைய வேண்டிய நிலையில் உள்ளது.காசல்ரீ நீர் தேக்க தத்தின் நீர் அதன் கொள்ளளவை எட்ட இன்னும் 2 அடி 6 அங்குலம் நிறைய வேண்டிய நிலையில் உள்ளது கென்யோன் புரோட்லேன்ட் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல விமலசுரேந்திர மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப் படுகிறது என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பணி மூட்டம் நிலவுகிறது இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து சாரதிகளும் வாகனங்களை செலுத்தும் போது வாகனங்களில் உள்ள மின் குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.
இப் பகுதியில் உள்ள அனைத்து காப்பட் இடப்பட்ட சாலைகள் வழுக்கும் தன்மை கொண்ட நிலையில் உள்ளதால் வாகனங்கள் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர
கன மழை பெய்து வருவதால் நீர் வீழ்ச்சி களில் அதிக அளவில் நீர் வருவதால் மோகினி எல்ல நீர் வீழ்ச்சி மரே நீர் வீழ்ச்சி காட்மோர் நீர் வீழ்ச்சி லக்சபான நீர் வீழ்ச்சி புரோட்லேன் நீர் வீழ்ச்சிகளை பார்வை இட செல்ல வேண்டாம் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் பண்ணையாளர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மலை பாங்கான பகுதியில் வசித்து வரும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.
மஸ்கெலியாவில் 24 மணி நேரத்தில் 132 மி.மீ. மழை; நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 24 ம் திகதி காலை 6 மணி முதல் இன்று 25 ம் திகதி காலை 6 மணி வரை 132 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான மத்திய நிலையம் அறிவித்துள்ளது.அத்துடன் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டி நிலையில் உள்ளது இன்னும் 3 அடி மட்டுமே நிறைய வேண்டிய நிலையில் உள்ளது.காசல்ரீ நீர் தேக்க தத்தின் நீர் அதன் கொள்ளளவை எட்ட இன்னும் 2 அடி 6 அங்குலம் நிறைய வேண்டிய நிலையில் உள்ளது கென்யோன் புரோட்லேன்ட் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல விமலசுரேந்திர மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப் படுகிறது என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பணி மூட்டம் நிலவுகிறது இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து சாரதிகளும் வாகனங்களை செலுத்தும் போது வாகனங்களில் உள்ள மின் குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.இப் பகுதியில் உள்ள அனைத்து காப்பட் இடப்பட்ட சாலைகள் வழுக்கும் தன்மை கொண்ட நிலையில் உள்ளதால் வாகனங்கள் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனரகன மழை பெய்து வருவதால் நீர் வீழ்ச்சி களில் அதிக அளவில் நீர் வருவதால் மோகினி எல்ல நீர் வீழ்ச்சி மரே நீர் வீழ்ச்சி காட்மோர் நீர் வீழ்ச்சி லக்சபான நீர் வீழ்ச்சி புரோட்லேன் நீர் வீழ்ச்சிகளை பார்வை இட செல்ல வேண்டாம் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பெருந்தோட்ட தொழிலாளர்கள் பண்ணையாளர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.தொடர்ந்து மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மலை பாங்கான பகுதியில் வசித்து வரும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.