• Jul 04 2026

116 வயது மூதாட்டியின் அசாத்திய பயணம்- 3550 படிகளை ஏறி கோவில் தரிசனம்!

Ziya / Jul 4th 2026, 3:24 pm
image

கர்நாடகாவைச் சேர்ந்த 116 வயதான ஒரு மூதாட்டி, தனது குடும்பத்தினரின் உதவியுடன் சுமார் 9 கிலோமீட்டர் நீளமான சவாலான பாதையை கடந்து, திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமானை தரிசனம் செய்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் வியப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


அந்த மூதாட்டி, திருப்பதியின் பிரசித்திபெற்ற அலிபிரி நடைபாதை வழியாக சுமார் 3550 படிகள் கொண்ட மலைப்பாதையை மெதுவாகக் கடந்து திருமலை உச்சியை அடைந்துள்ளார்.


வயது மிக அதிகமாக இருந்தபோதிலும், அவரின் பக்தியும் உறுதியும் அனைவருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.


குடும்பத்தினரின் முழு ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தில், அவர் ஒவ்வொரு கட்டத்திலும் ஓய்வெடுத்து கவனமாக முன்னேறியுள்ளார்.


குறித்த சம்பவம்,எதற்கும் வயது ஒரு தடையல்ல; நம்பிக்கை மற்றும் பக்தி இருந்தால் எந்த சவாலையும் கடக்கலாம் என  எடுத்துக்காட்டியுள்ளது.


116 வயது மூதாட்டியின் அசாத்திய பயணம்- 3550 படிகளை ஏறி கோவில் தரிசனம் கர்நாடகாவைச் சேர்ந்த 116 வயதான ஒரு மூதாட்டி, தனது குடும்பத்தினரின் உதவியுடன் சுமார் 9 கிலோமீட்டர் நீளமான சவாலான பாதையை கடந்து, திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமானை தரிசனம் செய்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் வியப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அந்த மூதாட்டி, திருப்பதியின் பிரசித்திபெற்ற அலிபிரி நடைபாதை வழியாக சுமார் 3550 படிகள் கொண்ட மலைப்பாதையை மெதுவாகக் கடந்து திருமலை உச்சியை அடைந்துள்ளார்.வயது மிக அதிகமாக இருந்தபோதிலும், அவரின் பக்தியும் உறுதியும் அனைவருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.குடும்பத்தினரின் முழு ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தில், அவர் ஒவ்வொரு கட்டத்திலும் ஓய்வெடுத்து கவனமாக முன்னேறியுள்ளார்.குறித்த சம்பவம்,எதற்கும் வயது ஒரு தடையல்ல; நம்பிக்கை மற்றும் பக்தி இருந்தால் எந்த சவாலையும் கடக்கலாம் என  எடுத்துக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement