மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, 07 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் நோக்கி, புதன்கிழமை (20) இன்று காலை நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளார்.
பிரேம்ராஜ் கார்கி என்ற இந்த சிறுவன் லிந்துலை, இந்தன்ஹோல் (Indenhaul) தோட்டத்தை சேர்ந்தவராவார். இவர் லிந்துலை சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.
மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) ஆகியவற்றில் மகஜர்களை கையளிப்பதற்காகவே குறித்த சிறுவன் இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த நடை பயணம் செய்யும் சிறுவனுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
காணி உரிமை கோரி ஜனாதிபதி செயலகம் வரை சிறுவன் நடை பயணம் மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, 07 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் நோக்கி, புதன்கிழமை (20) இன்று காலை நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளார்.பிரேம்ராஜ் கார்கி என்ற இந்த சிறுவன் லிந்துலை, இந்தன்ஹோல் (Indenhaul) தோட்டத்தை சேர்ந்தவராவார். இவர் லிந்துலை சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) ஆகியவற்றில் மகஜர்களை கையளிப்பதற்காகவே குறித்த சிறுவன் இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நடை பயணம் செய்யும் சிறுவனுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.