சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது கத்துக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி 06 அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள சிகை நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென உள் நுழைந்த இளைஞன் ஒருவர் அங்கிருந்த இளைஞர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலில் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹைராத் நகரிலுள்ள 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதலை நடத்திய இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவரைக் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனுக்கும் கத்தியால் குத்திய இளைஞனுக்கும் இடையே ஒரு சில நாட்களாக கை கலப்பு, வாய்த்தர்க்கம் இடம்பெற்று வந்த நிலையிலேயே கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிகை அலங்கார நிலையத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து; பொலிஸில் சரணடைந்த சந்தேகநபர்- காத்தான்குடியில் சம்பவம் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது கத்துக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி 06 அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள சிகை நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென உள் நுழைந்த இளைஞன் ஒருவர் அங்கிருந்த இளைஞர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். கத்திக்குத்து தாக்குதலில் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஹைராத் நகரிலுள்ள 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த இளைஞன் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவரைக் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனுக்கும் கத்தியால் குத்திய இளைஞனுக்கும் இடையே ஒரு சில நாட்களாக கை கலப்பு, வாய்த்தர்க்கம் இடம்பெற்று வந்த நிலையிலேயே கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.