• Jul 30 2026

மலசலகூடத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - யாழில் சம்பவம்

Chithra / Jul 29th 2026, 6:36 pm
image


யாழ்ப்பாணம் – சிராம்பியடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருள் பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த இளைஞர் கடந்த மூன்று வருடங்களாக போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை மலசலகூடத்திற்குச் சென்ற அவர் அங்கு மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.


இதனையடுத்து, அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.


அதிகளவான போதைப்பொருள் பாவனை காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

மலசலகூடத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் – சிராம்பியடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருள் பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த இளைஞர் கடந்த மூன்று வருடங்களாக போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை மலசலகூடத்திற்குச் சென்ற அவர் அங்கு மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.இதனையடுத்து, அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.அதிகளவான போதைப்பொருள் பாவனை காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement