முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் சபை உறுப்பினர்களிடம் கடும் தொனியில் மிரட்டியதாக உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு இன்றையதினம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மிரட்டும் விதமாக கூறிய அவரது உரையைக் கொண்ட ஆடியோ பதிவும் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது
தவிசாளருக்கு முழு அதிகாரம் உள்ளது.
நிறுவன தலைவர் என்ற அடிப்படையில் எந்த வட்டாரத்தில் எங்கு வேலை நடைபெற வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வதாகவும், நீங்கள் சின்னப்பிள்ளைத்தனமாக சேறு பூசும் அரசியலை செய்வீர்களானால், நீங்கள் அனைவரும் காணாமல் போய் விடுவீர்கள் என குறிப்பிட்டுள்ளார்
தற்போது நிலவும் மோசமான காலநிலையால் மக்கள் போக்குவரத்து,உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் சிரமங்களை எதிர்கொண்டு வரும் சூழலில், பிரதேச சபைத் தவிசாளரின் இத்தகைய கருத்துக்கள் உறுப்பினர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எங்கள் பாதுகாப்பு, நலன் தொடர்பாக தவிசாளர் தன்னிச்சையான அதிகாரப் பயன்பாட்டின் அடிப்படையில் எங்களை அச்சுறுத்துவது ஏற்க முடியாதது என சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் எல்லோரும் காணாமல் போயிடுவீங்க கடும் தொனியில் மிரட்டிய கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் சபை உறுப்பினர்களிடம் கடும் தொனியில் மிரட்டியதாக உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு இன்றையதினம் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு மிரட்டும் விதமாக கூறிய அவரது உரையைக் கொண்ட ஆடியோ பதிவும் தற்போது வெளியாகியுள்ளது.குறித்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவதுதவிசாளருக்கு முழு அதிகாரம் உள்ளது. நிறுவன தலைவர் என்ற அடிப்படையில் எந்த வட்டாரத்தில் எங்கு வேலை நடைபெற வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வதாகவும், நீங்கள் சின்னப்பிள்ளைத்தனமாக சேறு பூசும் அரசியலை செய்வீர்களானால், நீங்கள் அனைவரும் காணாமல் போய் விடுவீர்கள் என குறிப்பிட்டுள்ளார் தற்போது நிலவும் மோசமான காலநிலையால் மக்கள் போக்குவரத்து,உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் சிரமங்களை எதிர்கொண்டு வரும் சூழலில், பிரதேச சபைத் தவிசாளரின் இத்தகைய கருத்துக்கள் உறுப்பினர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் எங்கள் பாதுகாப்பு, நலன் தொடர்பாக தவிசாளர் தன்னிச்சையான அதிகாரப் பயன்பாட்டின் அடிப்படையில் எங்களை அச்சுறுத்துவது ஏற்க முடியாதது என சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.