மனிதக் கடத்தல் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்டக் குழுக்கள் அமைப்பும் பயிற்சி செயலமர்வும் வெற்றிகரமாக நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சி 2026 மார்ச் 04 மற்றும் 05 ஆகிய தினங்களில் Trinco Blu by Cinnamon விடுதியில் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இப்பயிற்சி செயலமர்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம் ஹேமந்த குமார, மேலதிக அரசாங்க அதிபர் எஸ் சுதாகரன், மாவட்டத்தில் பணிபுரியும் அரச அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மனிதக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள், மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் ஆதரவு தொடர்பாக விரிவான விளக்கங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
மேலும், மனிதக் கடத்தல் குற்றங்களைத் தடுக்கும் பணிகளில் மாவட்ட மட்டத்தில் செயல்திறன் வாய்ந்த ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்காக மாவட்டக் குழுவும் இந்நிகழ்வின் போது நிறுவப்பட்டது.
மனிதக் கடத்தல் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் செயலமர்வு மனிதக் கடத்தல் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்டக் குழுக்கள் அமைப்பும் பயிற்சி செயலமர்வும் வெற்றிகரமாக நிறைவுற்றது.இந்நிகழ்ச்சி 2026 மார்ச் 04 மற்றும் 05 ஆகிய தினங்களில் Trinco Blu by Cinnamon விடுதியில் நடைபெற்றது.பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இப்பயிற்சி செயலமர்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம் ஹேமந்த குமார, மேலதிக அரசாங்க அதிபர் எஸ் சுதாகரன், மாவட்டத்தில் பணிபுரியும் அரச அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மனிதக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள், மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் ஆதரவு தொடர்பாக விரிவான விளக்கங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.மேலும், மனிதக் கடத்தல் குற்றங்களைத் தடுக்கும் பணிகளில் மாவட்ட மட்டத்தில் செயல்திறன் வாய்ந்த ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்காக மாவட்டக் குழுவும் இந்நிகழ்வின் போது நிறுவப்பட்டது.