ஆர் .பி .கோ பெருந்தோட்ட கம்பனிக்கு உரித்தான மஸ்கெலியா மொக்கா தோட்ட த்தின் நான்கு பிரிவுகளை கொண்ட தொழிலாளர்கள் இன்று (6) காலை முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில் ,
மொக்கா தோட்ட எடம்ஸ்பீக் பிரிவில் உள்ள பங்களா காவலாளி ஒருவர் தோட்ட உதவி முகாமையாளரால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பி.சிவகுமாரா வயது 49 என்ற காவலாளி நேற்று இரவு வழமையான பணிக்கு சென்ற போது உதவி முகாமையாளர் தன்னை தாக்கியதை தொடர்ந்து நேற்று நல்லிரவு மஸ்கெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துவிட்டு மஸ்கெலியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
எனவே இது குறித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று. இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார கூறுகையில் சம்பந்தப்பட்ட புகாரை தொடர்ந்து சந்தேக நபரான தோட்ட உதவி முகாமையாளர் நிக்ஷன் பண்டார என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார் அவரை 7 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு ஆர் .பி .கோ பெருந்தோட்ட கம்பனிக்கு உரித்தான மஸ்கெலியா மொக்கா தோட்ட த்தின் நான்கு பிரிவுகளை கொண்ட தொழிலாளர்கள் இன்று (6) காலை முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில் ,மொக்கா தோட்ட எடம்ஸ்பீக் பிரிவில் உள்ள பங்களா காவலாளி ஒருவர் தோட்ட உதவி முகாமையாளரால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.குறித்த பி.சிவகுமாரா வயது 49 என்ற காவலாளி நேற்று இரவு வழமையான பணிக்கு சென்ற போது உதவி முகாமையாளர் தன்னை தாக்கியதை தொடர்ந்து நேற்று நல்லிரவு மஸ்கெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துவிட்டு மஸ்கெலியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .எனவே இது குறித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று. இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார கூறுகையில் சம்பந்தப்பட்ட புகாரை தொடர்ந்து சந்தேக நபரான தோட்ட உதவி முகாமையாளர் நிக்ஷன் பண்டார என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார் அவரை 7 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக தெரிவித்தார்.