உத்தரப் பிரதேசத்தில் நகைக்கடைக்கு வாடிக்கையாளர்கள் போலச் சென்ற பெண்கள், நகைகளை வாய்க்குள் மறைத்து எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஜ்னோர் மாவட்டம் சந்த்பூர் பகுதியில் உள்ள நகைக்கடைக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 12ஆம் தேதி, ஐந்து பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்கிய குழுவினர் திருமணத்திற்காக நகைகள் வாங்குவது போல் கடைக்குள் சென்றுள்ளனர். கடை ஊழியர்களிடம் தொடர்ந்து பேசியபடி பல்வேறு நகைகளை எடுத்துப் பார்த்துள்ளனர்.
பின்னர் நகைகள் எதையும் வாங்காமல் அவர்கள் கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதன்பின்னர் நகைகள் காணாமல் போனதை அறிந்த கடை உரிமையாளர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
இதில் சில பெண்கள் நகைகளை வாய்க்குள் மறைத்து வைத்ததாக கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
திருடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் காசியாபாத் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டனர்
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஜாஹிதா மற்றும் ஆஷியா என்ற இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தங்கக் காதணிகள், வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்ட நகைகள் மற்றும் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கும்பல் ஏற்கனவே இதேபோன்ற நகைத் திருட்டுகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், அவர்கள் வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வாய்க்குள் நகைகளை மறைத்து திருடிய பெண்கள் உத்தரப் பிரதேசத்தில் நகைக்கடைக்கு வாடிக்கையாளர்கள் போலச் சென்ற பெண்கள், நகைகளை வாய்க்குள் மறைத்து எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிஜ்னோர் மாவட்டம் சந்த்பூர் பகுதியில் உள்ள நகைக்கடைக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கடந்த 12ஆம் தேதி, ஐந்து பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்கிய குழுவினர் திருமணத்திற்காக நகைகள் வாங்குவது போல் கடைக்குள் சென்றுள்ளனர். கடை ஊழியர்களிடம் தொடர்ந்து பேசியபடி பல்வேறு நகைகளை எடுத்துப் பார்த்துள்ளனர்.பின்னர் நகைகள் எதையும் வாங்காமல் அவர்கள் கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.அதன்பின்னர் நகைகள் காணாமல் போனதை அறிந்த கடை உரிமையாளர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.இதில் சில பெண்கள் நகைகளை வாய்க்குள் மறைத்து வைத்ததாக கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.திருடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் காசியாபாத் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டனர்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஜாஹிதா மற்றும் ஆஷியா என்ற இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தங்கக் காதணிகள், வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்ட நகைகள் மற்றும் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தக் கும்பல் ஏற்கனவே இதேபோன்ற நகைத் திருட்டுகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், அவர்கள் வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்