• Apr 18 2026

பெரியகல்லாறு கடலில் பெண்ணின் சடலம் மீட்பு

shanu / Dec 4th 2025, 4:13 pm
image


மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற் கரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம்  இன்று வியாழக்கிழமை (04) கரை ஒதுங்கியுள்ளது.


கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியிருப்பதை அவதானித்துள்ளனர். 


தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.


சுமார் 55 வயது மதிக்கத்தக் பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது. 


எனினும் சடலம் தொடர்பில் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என அப்பகுதி பொதுமக்களும், கிராம சேவை உத்தியோகஸ்த்தரும் தெரிவித்தனர்.


சடலம் தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பெரியகல்லாறு கடலில் பெண்ணின் சடலம் மீட்பு மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற் கரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம்  இன்று வியாழக்கிழமை (04) கரை ஒதுங்கியுள்ளது.கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியிருப்பதை அவதானித்துள்ளனர். தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.சுமார் 55 வயது மதிக்கத்தக் பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது. எனினும் சடலம் தொடர்பில் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என அப்பகுதி பொதுமக்களும், கிராம சேவை உத்தியோகஸ்த்தரும் தெரிவித்தனர்.சடலம் தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement