ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஆனால், ரசிகர்களின் உற்சாகத்தில் 'மழை' மண்ணை அள்ளிப்போடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து 9-வது இடத்தில் தத்தளிக்கிறது கேகேஆர்.
வருண் சக்கரவர்த்தி - சுனில் நரைன் ஜோடியின் சுழற்பந்து வீச்சு எடுபடவில்லை.
அதிக விலைக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் இன்னும் தனது 'ஃபயர்' ஆட்டத்தை வெளிப்படுத்தாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று, நெட் ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்தில் வலுவாக உள்ளது பஞ்சாப்.
பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பஞ்சாப் அணி கில்லாடியாகச் செயல்படுகிறது.
கொல்கத்தாவில் இன்றைய தினம் மழைக்கான சாத்தியக்கூறுகள் (Rain Chances) மிக அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு 7.30 மணிக்குத் தொடங்க வேண்டிய போட்டியில் மழை குறுக்கிட்டால், ஓவர்கள் குறைக்கப்படலாம் அல்லது ஆட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்படலாம்.
IPL 2026 மழையால் ஆட்டம் கைவிடப்படுமா ரசிகர்கள் கவலை ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.ஆனால், ரசிகர்களின் உற்சாகத்தில் 'மழை' மண்ணை அள்ளிப்போடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து 9-வது இடத்தில் தத்தளிக்கிறது கேகேஆர்.வருண் சக்கரவர்த்தி - சுனில் நரைன் ஜோடியின் சுழற்பந்து வீச்சு எடுபடவில்லை.அதிக விலைக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் இன்னும் தனது 'ஃபயர்' ஆட்டத்தை வெளிப்படுத்தாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று, நெட் ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்தில் வலுவாக உள்ளது பஞ்சாப். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பஞ்சாப் அணி கில்லாடியாகச் செயல்படுகிறது.கொல்கத்தாவில் இன்றைய தினம் மழைக்கான சாத்தியக்கூறுகள் (Rain Chances) மிக அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இரவு 7.30 மணிக்குத் தொடங்க வேண்டிய போட்டியில் மழை குறுக்கிட்டால், ஓவர்கள் குறைக்கப்படலாம் அல்லது ஆட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்படலாம்.