• Oct 01 2026

திலீபனை பயங்கரவாதியாக சித்தரிப்பது ஏன்? – அருட்தந்தை சத்திவேல் கேள்வி

Chithra / Oct 1st 2026, 12:44 pm
image


தியாகத் தீபம் திலீபனுக்காக அமைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் அகற்றிச் சென்றதன் மூலம், திலீபனின் சிலையை தமிழர்களின் மனங்களில் உருவாக்கிவிட்டதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.


அவர் இன்று (01.10.2026) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தியாகத் தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமை, தமிழர்களின் அரசியல் மற்றும் வரலாற்றை மறைக்கும் நடவடிக்கையாகும் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


அகிம்சை வழியில் போராட்டத்தை முன்னெடுத்து, உணவு மற்றும் நீரைத் தவிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்தியாகம் செய்த திலீபனை பயங்கரவாதியாக சித்தரிப்பது ஏன் எனவும் அருட்தந்தை சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.


அத்துடன், திலீபனுக்கு மலர் அஞ்சலி செலுத்துவதும், அவரை நினைவுகூருவதும், தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக அகிம்சை வழியில் ஒன்றுகூடுவதும் எவ்வாறு பயங்கரவாதமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் குற்றம் சாட்டியதுடன், திலீபன் சிலையை மக்கள் கௌரவத்துடன் மீண்டும் அதே இடத்தில் நிறுவுமாறு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொண்டுள்ளார்.


மேலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குதல், மாவீரர்களை நினைவுகூருதல், யுத்த கால அனுபவங்களை ஆவணப்படுத்துதல் மற்றும் அகிம்சை வழிப் போராட்டங்களை நினைவுகூருதல் போன்றவை எவ்வாறு பயங்கரவாதமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழர்களின் தேசிய அடையாளங்களை பாதுகாத்து, வடக்கு மற்றும் கிழக்கில் கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், தமிழர்களை தொடர்ந்தும் ஒடுக்குவதற்குப் பதிலாக, அகிம்சை மற்றும் ஜனநாயக வழியில் தங்களை கட்டமைத்துக்கொள்ள இலங்கை அரசாங்கம் இடமளிக்க வேண்டும் எனவும், தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைத் தடுக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.


திலீபனுக்காக அமைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்ட சம்பவம், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களை தேசிய நலனுக்காக ஒன்றிணைக்கும் சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தியாகத் தீபம் திலீபனின் சிலையை பொலிஸார் அகற்றிச் சென்றாலும், அதன் மூலம் தமிழர்களின் மனங்களில் திலீபனின் நினைவு மேலும் ஆழமாக பதிந்துள்ளதாகவும் அருட்தந்தை மா. சத்திவேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திலீபனை பயங்கரவாதியாக சித்தரிப்பது ஏன் – அருட்தந்தை சத்திவேல் கேள்வி தியாகத் தீபம் திலீபனுக்காக அமைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் அகற்றிச் சென்றதன் மூலம், திலீபனின் சிலையை தமிழர்களின் மனங்களில் உருவாக்கிவிட்டதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவர் இன்று (01.10.2026) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தியாகத் தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமை, தமிழர்களின் அரசியல் மற்றும் வரலாற்றை மறைக்கும் நடவடிக்கையாகும் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.அகிம்சை வழியில் போராட்டத்தை முன்னெடுத்து, உணவு மற்றும் நீரைத் தவிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்தியாகம் செய்த திலீபனை பயங்கரவாதியாக சித்தரிப்பது ஏன் எனவும் அருட்தந்தை சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.அத்துடன், திலீபனுக்கு மலர் அஞ்சலி செலுத்துவதும், அவரை நினைவுகூருவதும், தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக அகிம்சை வழியில் ஒன்றுகூடுவதும் எவ்வாறு பயங்கரவாதமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் குற்றம் சாட்டியதுடன், திலீபன் சிலையை மக்கள் கௌரவத்துடன் மீண்டும் அதே இடத்தில் நிறுவுமாறு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குதல், மாவீரர்களை நினைவுகூருதல், யுத்த கால அனுபவங்களை ஆவணப்படுத்துதல் மற்றும் அகிம்சை வழிப் போராட்டங்களை நினைவுகூருதல் போன்றவை எவ்வாறு பயங்கரவாதமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழர்களின் தேசிய அடையாளங்களை பாதுகாத்து, வடக்கு மற்றும் கிழக்கில் கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், தமிழர்களை தொடர்ந்தும் ஒடுக்குவதற்குப் பதிலாக, அகிம்சை மற்றும் ஜனநாயக வழியில் தங்களை கட்டமைத்துக்கொள்ள இலங்கை அரசாங்கம் இடமளிக்க வேண்டும் எனவும், தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைத் தடுக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.திலீபனுக்காக அமைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்ட சம்பவம், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களை தேசிய நலனுக்காக ஒன்றிணைக்கும் சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தியாகத் தீபம் திலீபனின் சிலையை பொலிஸார் அகற்றிச் சென்றாலும், அதன் மூலம் தமிழர்களின் மனங்களில் திலீபனின் நினைவு மேலும் ஆழமாக பதிந்துள்ளதாகவும் அருட்தந்தை மா. சத்திவேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement