நாட்டிற்கு வடக்காக நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது படிப்படியாக வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும், இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மேல் சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும்.
அனுராதபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடல் பிராந்தியங்களில், காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
கடற்பிராந்தியங்களில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 25-35 கிலோமீற்றர் வரை காணப்படும்.
காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் இக்கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சுழற்றியடிக்கும் காற்று; கொந்தளிக்கும் கடல் பல பகுதிகளில் இன்றும் மழை நாட்டிற்கு வடக்காக நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது படிப்படியாக வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும், இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி, மேல் சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும்.அனுராதபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடல் பிராந்தியங்களில், காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.கடற்பிராந்தியங்களில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 25-35 கிலோமீற்றர் வரை காணப்படும். காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் இக்கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.