• May 18 2026

செவ்வந்திக்கு இனி நடக்கப்போவது என்ன? பொலிஸார் வெளியிட்ட அதிரடி தகவல்!

shanu / Oct 14th 2025, 3:58 pm
image

கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும்  4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.


புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார்.


இந்நிலையில் இலங்கை பொலிஸாரால் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த நிலையில் இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி வூட்லர் கருத்து தெரிவிக்கையில் 


 துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் துப்பாக்கிதாரியிடம் ஆயுதத்தை ஒப்படைத்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.


இஷாரா செவ்வந்தியுடன்  மேலும் ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர் இஷாரா செவ்வந்திக்க அடைக்கலம் கொடுத்ததற்காக ஒரு ஆண் கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் தொடர்பு வைத்திருந்ததற்காக மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். 


இலங்கையின் சிஐடி இரு நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் நேபாள அரசாங்கத்திற்கு இடையிலான ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் இந்தக் கைதுகள் சாத்தியமானதாக அவர் தெரிவித்துள்ளார் 


இஷாரா செவ்வந்தி உட்பட 06 சந்தேக நபர்களையும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 


இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட பின்னர்இ இதுவரை தேடப்படும் 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

செவ்வந்திக்கு இனி நடக்கப்போவது என்ன பொலிஸார் வெளியிட்ட அதிரடி தகவல் கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும்  4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார்.இந்நிலையில் இலங்கை பொலிஸாரால் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி வூட்லர் கருத்து தெரிவிக்கையில்  துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் துப்பாக்கிதாரியிடம் ஆயுதத்தை ஒப்படைத்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.இஷாரா செவ்வந்தியுடன்  மேலும் ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர் இஷாரா செவ்வந்திக்க அடைக்கலம் கொடுத்ததற்காக ஒரு ஆண் கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் தொடர்பு வைத்திருந்ததற்காக மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். இலங்கையின் சிஐடி இரு நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் நேபாள அரசாங்கத்திற்கு இடையிலான ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் இந்தக் கைதுகள் சாத்தியமானதாக அவர் தெரிவித்துள்ளார் இஷாரா செவ்வந்தி உட்பட 06 சந்தேக நபர்களையும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட பின்னர்இ இதுவரை தேடப்படும் 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement