• Jun 22 2026

பிலிப்பைன்ஸில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 3 மாணவர்கள் உயிரிழப்பு

Chithra / Jun 22nd 2026, 4:31 pm
image


 பிலிப்பைன்ஸ் நாட்டின் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.


வழமைபோல் கல்வி நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், இரண்டு மர்ம நபர்கள் திடீரென பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் 5 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்த பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்து விசாரணைக்கு எடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் குறித்த பாடசாலையின் முன்னாள் மாணவர் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.


துப்பாக்கிச் சூட்டுக்கான சரியான காரணம் இதுவரை உறுதியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடரும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை அறிவித்துள்ளது.


இந்த சம்பவம் காரணமாக தக்லோபன் நகரில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.


பிலிப்பைன்ஸில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 3 மாணவர்கள் உயிரிழப்பு  பிலிப்பைன்ஸ் நாட்டின் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.வழமைபோல் கல்வி நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், இரண்டு மர்ம நபர்கள் திடீரென பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் 5 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்த பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்து விசாரணைக்கு எடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் குறித்த பாடசாலையின் முன்னாள் மாணவர் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.துப்பாக்கிச் சூட்டுக்கான சரியான காரணம் இதுவரை உறுதியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடரும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை அறிவித்துள்ளது.இந்த சம்பவம் காரணமாக தக்லோபன் நகரில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.

Advertisement

Advertisement

Advertisement