• Apr 23 2026

புதையல் தோண்டிய நபர்களுக்கு ஏற்பட்ட நிலை...!samugammedia

Ziya / Dec 26th 2023, 1:37 pm
image

வாழைச்சேனை - கல்லிச்சியா பளை காப்புக்காட்டில் புதையல் தோண்டிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் விசேட அதிரடிப்படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்புத்தேகம, அனுராதபுரம், பராக்கிரம சமுத்திர, முருதலாவ, பொலன்னறுவை மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 20 மற்றும் 64 வயதுடையவர்களாவர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் உபகரணங்களும் தற்போது வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

புதையல் தோண்டிய நபர்களுக்கு ஏற்பட்ட நிலை.samugammedia வாழைச்சேனை - கல்லிச்சியா பளை காப்புக்காட்டில் புதையல் தோண்டிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வாகரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அங்கு அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் விசேட அதிரடிப்படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்புத்தேகம, அனுராதபுரம், பராக்கிரம சமுத்திர, முருதலாவ, பொலன்னறுவை மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 20 மற்றும் 64 வயதுடையவர்களாவர்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் உபகரணங்களும் தற்போது வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement