• May 20 2026

நோர்வேயில் இருந்து யாழ்.வந்தவருக்கு எமனான கிணறு! சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்றபோது நடந்த அசம்பாவிதம்

Chithra / Nov 20th 2025, 9:33 pm
image

யாழ்ப்பாணத்தில் கால் தவறி கிணற்றினுள் விழுந்த நபர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சின்னத்துரை ராஜ்வதனன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் நோர்வேயில் வசித்து வந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ளார். 

இன்று காலை சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்றவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார். பின்னர் கிணற்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


நோர்வேயில் இருந்து யாழ்.வந்தவருக்கு எமனான கிணறு சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்றபோது நடந்த அசம்பாவிதம் யாழ்ப்பாணத்தில் கால் தவறி கிணற்றினுள் விழுந்த நபர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சின்னத்துரை ராஜ்வதனன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,இவர் நோர்வேயில் வசித்து வந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ளார். இன்று காலை சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்றவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார். பின்னர் கிணற்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement