• Jun 28 2026

குப்புற கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்; வவுனியாவில் இரு இளைஞர்கள் வைத்தியசாலையில்!

Chithra / Jun 28th 2026, 4:25 pm
image


வவுனியா, ஓமந்தை பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.


இன்று இடம்பெற்ற இந்த விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில்  கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.


காயமடைந்த இரு இளைஞர்களையும் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, அம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்புற கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்; வவுனியாவில் இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் வவுனியா, ஓமந்தை பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.இன்று இடம்பெற்ற இந்த விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில்  கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.காயமடைந்த இரு இளைஞர்களையும் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, அம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement