• Oct 26 2026

பாழடைந்த கிணற்றுக்குள் மறைந்திருந்த ஆயுதங்கள் - பின்னணியில் இருப்பது என்ன?

Chithra / Oct 26th 2026, 1:01 pm
image


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து T-56 ரகத் துப்பாக்கிகளின் பாகங்கள் மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் (LMG) பாகங்கள் உள்ளிட்ட ஆயுதப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.


திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்தே குறித்த ஆயுதப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்ற திருக்கோவில் பொலிஸார், குறித்த கிணற்றில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.


இதன்போது, T-56 ரகத் துப்பாக்கிகளுக்கான 9 தோட்டாக்கூடுகள், போல்ட்கள் உள்ளிட்ட ஏனைய பாகங்களுடன் கூடிய 3 T-56 துப்பாக்கிப் பாகங்கள் மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கிகளுடன் தொடர்புடைய 6 பாகங்கள் அல்லது தோட்டாக்கூடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.


கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை - மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் நேரடி வழிகாட்டலிலும், அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் தந்தராயணவின் மேற்பார்வையிலும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.


திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலிந்த பீரிஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


இந்நிலையில், குறித்த ஆயுதப் பாகங்கள் கிணற்றில் எவ்வாறு வந்தன, அவை எவ்வளவு காலமாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாழடைந்த கிணற்றுக்குள் மறைந்திருந்த ஆயுதங்கள் - பின்னணியில் இருப்பது என்ன அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து T-56 ரகத் துப்பாக்கிகளின் பாகங்கள் மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் (LMG) பாகங்கள் உள்ளிட்ட ஆயுதப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்தே குறித்த ஆயுதப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்ற திருக்கோவில் பொலிஸார், குறித்த கிணற்றில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.இதன்போது, T-56 ரகத் துப்பாக்கிகளுக்கான 9 தோட்டாக்கூடுகள், போல்ட்கள் உள்ளிட்ட ஏனைய பாகங்களுடன் கூடிய 3 T-56 துப்பாக்கிப் பாகங்கள் மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கிகளுடன் தொடர்புடைய 6 பாகங்கள் அல்லது தோட்டாக்கூடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை - மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் நேரடி வழிகாட்டலிலும், அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் தந்தராயணவின் மேற்பார்வையிலும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலிந்த பீரிஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த ஆயுதப் பாகங்கள் கிணற்றில் எவ்வாறு வந்தன, அவை எவ்வளவு காலமாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement