• Jul 06 2026

டெங்கு ஒழிப்பில் வெற்றி பெற்ற நாடுகளின் அனுபவங்களை பின்பற்ற வேண்டும் – புபுது ஜெயகொட வலியுறுத்து

Chithra / Jul 6th 2026, 11:24 am
image


டெங்கு ஒழிப்பில் வெற்றி பெற்ற நாடுகளின் அனுபவங்களைப் பயன்படுத்தி நடைமுறைச் செயல் திட்டங்களை அமுல்படுத்துவது அவசியம் என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட வலியுறுத்தினார்.


கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர்  மேலும் தெரிவிக்கையில்,


நாட்டில் டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் வெறும் பிரசாரங்கள் மற்றும் அறிவிப்புகளில் மட்டும் நின்றுவிடாமல், நேரடி மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.


தொற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவுடன் இணைந்து நிலையான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.அரசாங்கம் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டும் அரசியல் நிலைப்பாட்டில் மட்டும் ஈடுபட்டால், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாது.


மேலும், க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இவ்வாறான டெங்கு பரவல் ஏற்பட்டிருக்காது.


தற்போது பெரும்பாலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிரசார நடவடிக்கைகள் மட்டுமே நடைபெறுகின்றன. ஆனால் கள மட்டத்தில் நடைமுறை நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன.


டெங்கு ஒழிப்பில் வெற்றி பெற்ற நாடுகள் பயன்படுத்திய நடைமுறை அனுபவங்களை ஆய்வு செய்து, அவற்றை இலங்கையின் நிலைமைக்கு ஏற்ப மாற்றி அமுல்படுத்த வேண்டியது அவசியம்  என்றார்.

 

டெங்கு ஒழிப்பில் வெற்றி பெற்ற நாடுகளின் அனுபவங்களை பின்பற்ற வேண்டும் – புபுது ஜெயகொட வலியுறுத்து டெங்கு ஒழிப்பில் வெற்றி பெற்ற நாடுகளின் அனுபவங்களைப் பயன்படுத்தி நடைமுறைச் செயல் திட்டங்களை அமுல்படுத்துவது அவசியம் என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட வலியுறுத்தினார்.கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர்  மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் வெறும் பிரசாரங்கள் மற்றும் அறிவிப்புகளில் மட்டும் நின்றுவிடாமல், நேரடி மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.தொற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவுடன் இணைந்து நிலையான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.அரசாங்கம் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டும் அரசியல் நிலைப்பாட்டில் மட்டும் ஈடுபட்டால், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாது.மேலும், க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இவ்வாறான டெங்கு பரவல் ஏற்பட்டிருக்காது.தற்போது பெரும்பாலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிரசார நடவடிக்கைகள் மட்டுமே நடைபெறுகின்றன. ஆனால் கள மட்டத்தில் நடைமுறை நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன.டெங்கு ஒழிப்பில் வெற்றி பெற்ற நாடுகள் பயன்படுத்திய நடைமுறை அனுபவங்களை ஆய்வு செய்து, அவற்றை இலங்கையின் நிலைமைக்கு ஏற்ப மாற்றி அமுல்படுத்த வேண்டியது அவசியம்  என்றார். 

Advertisement

Advertisement

Advertisement