• Apr 19 2026

அதிக வெப்பத்தால் வெகுவாக குறையும் நீர்தேக்கங்களின் நீர்மட்டம்

Chithra / Apr 19th 2026, 10:52 am
image

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக உஷ்ணம் நிலவிவருவதால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.


மவுஸ்சாகலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 34 அடி குறைந்துள்ளது.


அதன் காரணமாக 1969 ம் ஆண்டு நீரில் மூழ்கிய முன்னைய மஸ்கெலியா நகரில் இருந்த ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயம், சுமனா ராம விகாரை, இஸ்லாமிய பள்ளிவாயில் சுமனா ராம விகாரையில் இருந்த புத்தபிரானின் உருவச் சிலை, முன்னாள் கங்குவத்தை நகரில் இருந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் போன்றவற்றை தற்போது தரிசனம் செய்ய முடியும்.


இவ்வாறு நீர் குறைந்துள்ளதால் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அங்கு படை எடுத்து செல்வதை காண கூடியதாக உள்ளது.


அவ்வாறு நீர்தேக்க பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் .எஸ். புஷ்பகுமார மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


நீர்தேக்க பகுதியில் சகதி கூடுதலாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், இந்த நீர்தேக்கத்தில் நீராட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.


தொடர்ந்து இவ்வாறான காலநிலை தொடரும் பட்சத்தில் நீர் மின் உற்பத்தி பாரியளவில் பாதிக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

அதிக வெப்பத்தால் வெகுவாக குறையும் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக உஷ்ணம் நிலவிவருவதால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.மவுஸ்சாகலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 34 அடி குறைந்துள்ளது.அதன் காரணமாக 1969 ம் ஆண்டு நீரில் மூழ்கிய முன்னைய மஸ்கெலியா நகரில் இருந்த ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயம், சுமனா ராம விகாரை, இஸ்லாமிய பள்ளிவாயில் சுமனா ராம விகாரையில் இருந்த புத்தபிரானின் உருவச் சிலை, முன்னாள் கங்குவத்தை நகரில் இருந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் போன்றவற்றை தற்போது தரிசனம் செய்ய முடியும்.இவ்வாறு நீர் குறைந்துள்ளதால் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அங்கு படை எடுத்து செல்வதை காண கூடியதாக உள்ளது.அவ்வாறு நீர்தேக்க பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் .எஸ். புஷ்பகுமார மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நீர்தேக்க பகுதியில் சகதி கூடுதலாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், இந்த நீர்தேக்கத்தில் நீராட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.தொடர்ந்து இவ்வாறான காலநிலை தொடரும் பட்சத்தில் நீர் மின் உற்பத்தி பாரியளவில் பாதிக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement