• Sep 29 2026

ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை – ஒக்டோபர் 1ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு

Chithra / Sep 29th 2026, 1:57 pm
image


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) பிடியாணை பிறப்பித்துள்ளது.


பொலிஸ்மா அதிபர் ஊடாக இந்த பிடியாணையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதற்கமைய, ஞானசார தேரரை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்துக்கு புறம்பானது மற்றும் செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையை அமுல்படுத்துமாறு சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட பல தரப்பினர், ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த பின்னர், உயர் நீதிமன்றம் கடந்த 10ஆம் திகதி இந்த பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என தீர்ப்பளித்திருந்தது.


பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு 2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்ற அனுமதியின்றி உரையாற்றியதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.


இந்த முறைப்பாட்டை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 2018ஆம் ஆண்டு மே 24ஆம் திகதி ஞானசார தேரரை குற்றவாளியாக அறிவித்து, 19 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்ததுடன், அதனை ஆறு ஆண்டுகளில் அனுபவிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது.


எனினும், 2019ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி அன்றைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஞானசார தேரர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.


தற்போது அந்த பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை – ஒக்டோபர் 1ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) பிடியாணை பிறப்பித்துள்ளது.பொலிஸ்மா அதிபர் ஊடாக இந்த பிடியாணையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கமைய, ஞானசார தேரரை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்துக்கு புறம்பானது மற்றும் செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையை அமுல்படுத்துமாறு சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட பல தரப்பினர், ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த பின்னர், உயர் நீதிமன்றம் கடந்த 10ஆம் திகதி இந்த பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என தீர்ப்பளித்திருந்தது.பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு 2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்ற அனுமதியின்றி உரையாற்றியதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இந்த முறைப்பாட்டை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 2018ஆம் ஆண்டு மே 24ஆம் திகதி ஞானசார தேரரை குற்றவாளியாக அறிவித்து, 19 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்ததுடன், அதனை ஆறு ஆண்டுகளில் அனுபவிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது.எனினும், 2019ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி அன்றைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஞானசார தேரர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.தற்போது அந்த பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement