யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை கைதி ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பூபாலசிங்கம் ஜெயக்குமார் என்பவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குற்றவாளிகளுக்கு ஏற்கனவே யாழ்ப்பாணம் உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்,அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை மீள்பரிசீலனை செய்யுமாறு கொழும்பு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.
அதன்பின்னர் கொழும்பு நீதிமன்றமும் அந்த தீர்ப்பினை உறுதி செய்தது. அதன்பின்னர் அந்த தீர்ப்பை வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதன்படி நேற்றையதினம் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில் குறித்த கைதி இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 7 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அதன்பின்னர் இந்த தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றமும் மேல் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி உயிர்மாய்ப்பு - யாழ். சிறைக்குள் சம்பவம் யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை கைதி ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பூபாலசிங்கம் ஜெயக்குமார் என்பவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த குற்றவாளிகளுக்கு ஏற்கனவே யாழ்ப்பாணம் உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்,அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை மீள்பரிசீலனை செய்யுமாறு கொழும்பு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.அதன்பின்னர் கொழும்பு நீதிமன்றமும் அந்த தீர்ப்பினை உறுதி செய்தது. அதன்பின்னர் அந்த தீர்ப்பை வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.அதன்படி நேற்றையதினம் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில் குறித்த கைதி இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 7 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அதன்பின்னர் இந்த தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றமும் மேல் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.