வெனிசுலா மீது அமெரிக்கா “பெரிய அளவிலான” தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று ( 03) உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தனது சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட பதிவில்,
“வெனிசுலா மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்கா ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. அவர் தனது மனைவியுடன் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது,” என குறிப்பிட்டுள்ளார்.
“இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய மேலதிக விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். இன்று காலை 11 மணிக்கு மார்-எ-லாகோவில் செய்தியாளர் மாநாடு நடைபெறும்,” என டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெனிசுலா அரசு அல்லது சர்வதேச அமைப்புகளின் அதிகாரப்பூர்வ பதில்கள் இதுவரை வெளியாகவில்லை.
வெனிசுலா ஜனாதிபதியும் அவரது மனைவியும் கைது வெனிசுலா மீது அமெரிக்கா “பெரிய அளவிலான” தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று ( 03) உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நடவடிக்கையின் போது வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.டிரம்ப் தனது சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட பதிவில்,“வெனிசுலா மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்கா ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. அவர் தனது மனைவியுடன் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது,” என குறிப்பிட்டுள்ளார்.“இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய மேலதிக விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். இன்று காலை 11 மணிக்கு மார்-எ-லாகோவில் செய்தியாளர் மாநாடு நடைபெறும்,” என டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெனிசுலா அரசு அல்லது சர்வதேச அமைப்புகளின் அதிகாரப்பூர்வ பதில்கள் இதுவரை வெளியாகவில்லை.