• May 17 2026

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா! கொடியேற்றதுடன் ஆரம்பம்

Aathira / Sep 21st 2025, 12:54 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று இடம்பெற்ற  விசேட பூசைகள், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான குருமார் திருவிழாவிற்கான கிரியைகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதுள்ள சுப வேளையில் கொடியேற்றம் மற்றும் சிறப்பு பூசைகள் இடம் பெற்றுவருகின்றன.

வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவில் இரண்டாம் நாளான நாளை திங்கட்கிழமை முதல் 

7 ம் திருவிழாவான 27.09.2025 வரை உள்வீதியுலாவும், 

28.09.2025 வெளிவீதியில் ஞாயிறுக்கிழமை  குருக்கட்டு விநாயகர் தரிசனமும்,  

29.09.2025 திங்கட்கிழமை  வெண்ணைத்  திருவிழாவும், 

30.09.2025 செவ்வாய்க்கிழமை  துகில் திருவிழாவும்,  

01.10.2025 புதன்கிழமை  பாம்பு திருவிழாவும், 02.10.2025 வியாழக்கிழமை  கம்சன் போர் திருவிழாவும், 

03.10.2025 வெள்ளிக்கிழமை  வேட்டை திருவிழாவும், 

04.10.2025 சனிக்கிழமை  சப்பறத்திருவிழாவும், 

05.10.2025 ஞாயிறுக்கிழமை  தேர்த்திருவிழாவும்,  

06.10.2025 திங்கட்கிழமை  சமுத்திர தீர்த்த திருவிழாவும், 

07.10.2025 செவ்வாய்க்கிழமை  பட்டுத்தீர்த்த திருவிழாவும், 

08.10.2025 ஆஞ்சநேயர் மடையும் இடம் பெறவுள்ளது.

திருவிழாவிற்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பருத்தித்துறை பிரதேச சபையும் இணைந்து மேற்கொண்டுள்ளன.

மேலும் நிர்வாக ஒழுங்குகளை பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர்  தலமையிலும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் ஏனைய பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றதுடன் ஆரம்பம் யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று இடம்பெற்ற  விசேட பூசைகள், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான குருமார் திருவிழாவிற்கான கிரியைகளை மேற்கொண்டுள்ளனர்.தற்போதுள்ள சுப வேளையில் கொடியேற்றம் மற்றும் சிறப்பு பூசைகள் இடம் பெற்றுவருகின்றன.வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவில் இரண்டாம் நாளான நாளை திங்கட்கிழமை முதல் 7 ம் திருவிழாவான 27.09.2025 வரை உள்வீதியுலாவும், 28.09.2025 வெளிவீதியில் ஞாயிறுக்கிழமை  குருக்கட்டு விநாயகர் தரிசனமும்,  29.09.2025 திங்கட்கிழமை  வெண்ணைத்  திருவிழாவும், 30.09.2025 செவ்வாய்க்கிழமை  துகில் திருவிழாவும்,  01.10.2025 புதன்கிழமை  பாம்பு திருவிழாவும், 02.10.2025 வியாழக்கிழமை  கம்சன் போர் திருவிழாவும், 03.10.2025 வெள்ளிக்கிழமை  வேட்டை திருவிழாவும், 04.10.2025 சனிக்கிழமை  சப்பறத்திருவிழாவும், 05.10.2025 ஞாயிறுக்கிழமை  தேர்த்திருவிழாவும்,  06.10.2025 திங்கட்கிழமை  சமுத்திர தீர்த்த திருவிழாவும், 07.10.2025 செவ்வாய்க்கிழமை  பட்டுத்தீர்த்த திருவிழாவும், 08.10.2025 ஆஞ்சநேயர் மடையும் இடம் பெறவுள்ளது.திருவிழாவிற்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பருத்தித்துறை பிரதேச சபையும் இணைந்து மேற்கொண்டுள்ளன.மேலும் நிர்வாக ஒழுங்குகளை பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர்  தலமையிலும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் ஏனைய பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement