• Sep 21 2026

அனோஜனை காப்பாற்ற கொழும்பில் அவசர நகர்வு - சவூதி தூதரகத்துக்கு சென்ற குடும்பத்தினர்

Chithra / Sep 21st 2026, 12:59 pm
image


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், இன்று (21) சவூதி அரேபிய தூதரகத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


கல்முனையில் இருந்து குழுவாக கொழும்புக்கு வருகை தந்த அனோஜனின் குடும்ப உறுப்பினர்களுடன், மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகேவும் தூதரகத்துக்கு சென்றுள்ளார்.


மேலும், சில சமூக செயற்பாட்டாளர்களும் அனோஜனின் குடும்பத்தினருடன் தூதரகத்துக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், சிவராசா அனோஜனின் விடுதலைக்காக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


அத்துடன், அனோஜனின் விடுதலைக்காக கட்சி, இனம், மதம், சாதி பேதமின்றி செய்யக்கூடிய அதிகபட்ச தலையீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள சிவராசா அனோஜன், பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற தவறான கருத்துப் பரிமாற்றம் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.


அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக எந்தத் தரப்பினராலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அனோஜனுக்கு விடுதலை கிடைக்கும் வரை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையில் நிவாரணம் வழங்கி, அவருக்கு முழுமையான விடுதலையைப் பெற்றுக்கொடுக்குமாறு சவூதி அரேபிய மன்னரிடம் கனிவுடனும் கௌரவத்துடனும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், அனோஜனின் பெற்றோர் இன்று காலை கொழும்புக்கு வருகை தந்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளனர்.


இதன்போது, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட எதிர்க்கட்சித் தலைவர், அனோஜனின் விடுதலை தொடர்பான விடயங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார்.


மேலும், சவூதி சிறையில் உள்ள சிவராசா அனோஜனுடனும் தொலைபேசி மூலம் உரையாடிய சஜித் பிரேமதாச, அவரிடம் விடயங்களை கேட்டறிந்துள்ளார்.


தொடர்ந்து, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரையும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அவர், அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.


இந்தச் சந்திப்பில், சிவராசா அனோஜனின் தந்தை தம்பிராசா சிவராசா, தாயார் இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரர் சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனோஜனை காப்பாற்ற கொழும்பில் அவசர நகர்வு - சவூதி தூதரகத்துக்கு சென்ற குடும்பத்தினர் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், இன்று (21) சவூதி அரேபிய தூதரகத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்முனையில் இருந்து குழுவாக கொழும்புக்கு வருகை தந்த அனோஜனின் குடும்ப உறுப்பினர்களுடன், மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகேவும் தூதரகத்துக்கு சென்றுள்ளார்.மேலும், சில சமூக செயற்பாட்டாளர்களும் அனோஜனின் குடும்பத்தினருடன் தூதரகத்துக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், சிவராசா அனோஜனின் விடுதலைக்காக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அத்துடன், அனோஜனின் விடுதலைக்காக கட்சி, இனம், மதம், சாதி பேதமின்றி செய்யக்கூடிய அதிகபட்ச தலையீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள சிவராசா அனோஜன், பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற தவறான கருத்துப் பரிமாற்றம் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக எந்தத் தரப்பினராலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அனோஜனுக்கு விடுதலை கிடைக்கும் வரை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையில் நிவாரணம் வழங்கி, அவருக்கு முழுமையான விடுதலையைப் பெற்றுக்கொடுக்குமாறு சவூதி அரேபிய மன்னரிடம் கனிவுடனும் கௌரவத்துடனும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், அனோஜனின் பெற்றோர் இன்று காலை கொழும்புக்கு வருகை தந்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளனர்.இதன்போது, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட எதிர்க்கட்சித் தலைவர், அனோஜனின் விடுதலை தொடர்பான விடயங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார்.மேலும், சவூதி சிறையில் உள்ள சிவராசா அனோஜனுடனும் தொலைபேசி மூலம் உரையாடிய சஜித் பிரேமதாச, அவரிடம் விடயங்களை கேட்டறிந்துள்ளார்.தொடர்ந்து, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரையும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அவர், அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.இந்தச் சந்திப்பில், சிவராசா அனோஜனின் தந்தை தம்பிராசா சிவராசா, தாயார் இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரர் சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement