கிளிநொச்சியில் பூட்டியிருந்த வீடுகள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இராமனபுரம் மற்றும் அக்கராயன் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், விசாரணைகள் தீவிரமடைந்த நிலையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் தாயும் மகனும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 21½ பவுன் தங்க நகைகள் மற்றும் 10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இருவரிடமும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில்,
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் பரபரப்பு; தாயும் மகனும் செய்த மோசமான செயல் கிளிநொச்சியில் பூட்டியிருந்த வீடுகள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.இராமனபுரம் மற்றும் அக்கராயன் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.ஆனால், விசாரணைகள் தீவிரமடைந்த நிலையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது.கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் தாயும் மகனும் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 21½ பவுன் தங்க நகைகள் மற்றும் 10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து இருவரிடமும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.