• Jul 08 2026

தரவுகளை திரட்ட ஒன்றுகூடும் வேலையற்ற பட்டதாரிகள்- அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு!

Chithra / Jul 7th 2026, 1:38 pm
image


தரவுகளை திரட்டிக் கொள்ளும் முகமாக பல்கலைக் கல்வியை நிறைவுசெய்து பட்டங்களுடன் வேலையற்ற பட்டதாரிகளாக உள்ள அனைவரும் எதிர்வரும் 12.07.2026 ஆம் நாளன்று தந்தை செல்வா அரங்கில் ஒன்று கூடுமாறு குறித்த சங்கத்தின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் குறித்த சங்கத்தின் செயலாளர் நேற்று யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து மேலும் கூறுகையில் -


பல்வேறு பட்டங்களுடனும் தகைமையுடனும் பட்டதாரிகள் வேலையில்லாது போராட்டங்களென அலைந்து திரியும் நிலையில்  அரச வேலைவாய்ப்பாக இருந்தாலும் சரி தனியார் தொழில்வாய்ப்பாக இருந்தாலும் சரி யாரிடம் என்ன தொழில் தகைமை இருக்கின்றது என்ற தெளிவு இல்லாதிருப்பதனால் பல்வேறு வாய்ப்புகள் தவறவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


குறிப்பாக  தனியார் துறையில் பல்வேறு துறைகளில் தொழில்வாய்புக்களை வழங்க தொழிலதிபர்கள் முன்வருகின்றனர்.ஆனால் அதற்கான தொழில் தகமை தரவுகள் எம்மிடம் இல்லாதிருக்கின்றது.இந்த நிலையில் பட்டதாரிகளின் தகவல் திரட்டுவது அவசியமாகின்றது.


இந்த தகவல் திரட்டு எந்தவித பிற நோக்கங்களுக்கும் உட்படாத வகையில் திரட்டப்படுவதால் வடக்கின் அனைத்து மாவட்டங்களினதும் வேகையற்ற பட்டதாரிகள் ஒன்றுகூடி தமது தராதரங்களை வழங்கி ஒத்துழைக்குமாறும் கோரியிருந்தார்.


மேலும்.குறித்த தினத்தன்று மதியம் 1.30 மணியளவில் அனைத்து பட்டதாரிகளும் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதால் அனைத்து தமிழ்  அரசியல்வாதிகள் பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள் குறிப்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் என அனைவரும் கலந்து எமது அடுத்தகட்ட பயணத்துக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

 

தரவுகளை திரட்ட ஒன்றுகூடும் வேலையற்ற பட்டதாரிகள்- அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு தரவுகளை திரட்டிக் கொள்ளும் முகமாக பல்கலைக் கல்வியை நிறைவுசெய்து பட்டங்களுடன் வேலையற்ற பட்டதாரிகளாக உள்ள அனைவரும் எதிர்வரும் 12.07.2026 ஆம் நாளன்று தந்தை செல்வா அரங்கில் ஒன்று கூடுமாறு குறித்த சங்கத்தின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் குறித்த சங்கத்தின் செயலாளர் நேற்று யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து மேலும் கூறுகையில் -பல்வேறு பட்டங்களுடனும் தகைமையுடனும் பட்டதாரிகள் வேலையில்லாது போராட்டங்களென அலைந்து திரியும் நிலையில்  அரச வேலைவாய்ப்பாக இருந்தாலும் சரி தனியார் தொழில்வாய்ப்பாக இருந்தாலும் சரி யாரிடம் என்ன தொழில் தகைமை இருக்கின்றது என்ற தெளிவு இல்லாதிருப்பதனால் பல்வேறு வாய்ப்புகள் தவறவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.குறிப்பாக  தனியார் துறையில் பல்வேறு துறைகளில் தொழில்வாய்புக்களை வழங்க தொழிலதிபர்கள் முன்வருகின்றனர்.ஆனால் அதற்கான தொழில் தகமை தரவுகள் எம்மிடம் இல்லாதிருக்கின்றது.இந்த நிலையில் பட்டதாரிகளின் தகவல் திரட்டுவது அவசியமாகின்றது.இந்த தகவல் திரட்டு எந்தவித பிற நோக்கங்களுக்கும் உட்படாத வகையில் திரட்டப்படுவதால் வடக்கின் அனைத்து மாவட்டங்களினதும் வேகையற்ற பட்டதாரிகள் ஒன்றுகூடி தமது தராதரங்களை வழங்கி ஒத்துழைக்குமாறும் கோரியிருந்தார்.மேலும்.குறித்த தினத்தன்று மதியம் 1.30 மணியளவில் அனைத்து பட்டதாரிகளும் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதால் அனைத்து தமிழ்  அரசியல்வாதிகள் பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள் குறிப்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் என அனைவரும் கலந்து எமது அடுத்தகட்ட பயணத்துக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். 

Advertisement

Advertisement

Advertisement