யாழ்ப்பாணம் மாநகரத்தின் கோட்டைப் பகுதி கடற்கரை வீதியில் மாநகரசபையின் எவ்வித அனுமதிகளும் இன்றி போக்குவரத்திற்கு இடையூறாக மேற்கொள்ளப்படும் நடமாடும் வியாபாரங்களை பொலிஸாரின் உதவியுடன் அப்புறப்படுத்துவதற்கு முதல்வர் மதிவதனி அவர்கள் களத்தில் நின்று உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
மேற்படி அனுமதியற்ற வியாபார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முதல்வரின் கள விஜயத்தில் கௌரவ மாநகர உறுப்பினர்கள், பிரதம கணக்காளர், பிரதம வருமானவரி பரிசோதகர், வருமானவரி பரிசோதகர் மற்றும் பொலீஸார் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நடவடிக்கை ஊடாக குறித்த கோட்டை பின்புற கடற்கரை வீதி பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த அனுமதியற்ற வியாபார நடவடிக்கைகள் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் போக்குவரத்திற்கு காணப்பட்ட இடையூறுகளும் நீக்கப்பட்டுள்ளன.
அனுமதி அற்ற வியாபார நடவடிக்கை முதல்வர் மதிவதனி களத்தில் அதிரடி நடவடிக்கை யாழ்ப்பாணம் மாநகரத்தின் கோட்டைப் பகுதி கடற்கரை வீதியில் மாநகரசபையின் எவ்வித அனுமதிகளும் இன்றி போக்குவரத்திற்கு இடையூறாக மேற்கொள்ளப்படும் நடமாடும் வியாபாரங்களை பொலிஸாரின் உதவியுடன் அப்புறப்படுத்துவதற்கு முதல்வர் மதிவதனி அவர்கள் களத்தில் நின்று உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.மேற்படி அனுமதியற்ற வியாபார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முதல்வரின் கள விஜயத்தில் கௌரவ மாநகர உறுப்பினர்கள், பிரதம கணக்காளர், பிரதம வருமானவரி பரிசோதகர், வருமானவரி பரிசோதகர் மற்றும் பொலீஸார் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.இந் நடவடிக்கை ஊடாக குறித்த கோட்டை பின்புற கடற்கரை வீதி பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த அனுமதியற்ற வியாபார நடவடிக்கைகள் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் போக்குவரத்திற்கு காணப்பட்ட இடையூறுகளும் நீக்கப்பட்டுள்ளன.