சீனாவின் தெற்கு பகுதியில் ஜூலை தொடக்கத்தில் தாக்கிய மேசாக் புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளம் ஆகியவற்றின் தாக்கம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரியதாக இருந்தது தெரியவந்துள்ளது.
குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பிராந்தியத்தில் ஏற்பட்ட இந்த பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 10 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர்.
மேசாக் புயல் கொண்டு வந்த நீடித்த மற்றும் பரவலான கனமழையால் நான்னிங் மற்றும் குய்காங் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த இரு நகரங்களிலும் உள்ள 16 மாவட்டங்கள் மற்றும் நிர்வாகப் பகுதிகளில் 1.65 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்னிங் பகுதியில் நிலைமை மிகவும் மோசமடைந்ததற்கு நீர்த்தேக்க அணைகள் உடைந்ததும் முக்கிய காரணமாக அமைந்தது.
அங்கு மட்டும் ஆறு அணைகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் 107 பேர் உயிரிழந்ததாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சில பகுதிகளில் மழையின் மொத்த அளவு 90 சென்டிமீட்டருக்கும் அதிகமாக பதிவானது.
ஜூலை மாதத்தில் பேரழிவு ஏற்பட்டபோது ஆரம்பத்தில் 39 உயிரிழப்புகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலான காலத்திற்குப் பிறகு அதிகாரிகள் புதிய உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனால் தற்போது வெளியான 159 என்ற எண்ணிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆசியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளின் பின்னணியில் இந்த பேரழிவு மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை புரட்டிப் போட்ட மேசாக் புயல்-பலி எண்ணிக்கை 159 ஆக உயர்வு சீனாவின் தெற்கு பகுதியில் ஜூலை தொடக்கத்தில் தாக்கிய மேசாக் புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளம் ஆகியவற்றின் தாக்கம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரியதாக இருந்தது தெரியவந்துள்ளது.குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பிராந்தியத்தில் ஏற்பட்ட இந்த பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர்.மேசாக் புயல் கொண்டு வந்த நீடித்த மற்றும் பரவலான கனமழையால் நான்னிங் மற்றும் குய்காங் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.இந்த இரு நகரங்களிலும் உள்ள 16 மாவட்டங்கள் மற்றும் நிர்வாகப் பகுதிகளில் 1.65 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நான்னிங் பகுதியில் நிலைமை மிகவும் மோசமடைந்ததற்கு நீர்த்தேக்க அணைகள் உடைந்ததும் முக்கிய காரணமாக அமைந்தது.அங்கு மட்டும் ஆறு அணைகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் 107 பேர் உயிரிழந்ததாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சில பகுதிகளில் மழையின் மொத்த அளவு 90 சென்டிமீட்டருக்கும் அதிகமாக பதிவானது.ஜூலை மாதத்தில் பேரழிவு ஏற்பட்டபோது ஆரம்பத்தில் 39 உயிரிழப்புகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலான காலத்திற்குப் பிறகு அதிகாரிகள் புதிய உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனால் தற்போது வெளியான 159 என்ற எண்ணிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.ஆசியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளின் பின்னணியில் இந்த பேரழிவு மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.