• May 25 2026

சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!

shanu / May 25th 2026, 10:26 am
image

சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இச் சம்பவம் நேற்று 24 ம் திகதி மஸ்கெலியா பொலிசாரினால் 21 வயது 38 வயது உடைய இருவர் அதிரடியாக கைது செய்தனர்.


இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார தெரிவிக்கையில்,

சாமி மலை கவரவலை தோட்ட பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன இது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டு இருந்த வேளையில் 

கடந்த 21 ம் திகதி சுமார் 18 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் எரிவாயு வெற்று சிலிண்டர் போன்ற பொருட்கள் களவாட பட்டு உள்ளது என கிடைக்க பெற்ற புகாரைத் தொடர்ந்து தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

கொள்ளை இடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இன்று 25 ம் திகதி திங்கட்கிழமை ஹட்டன் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.  

சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று 24 ம் திகதி மஸ்கெலியா பொலிசாரினால் 21 வயது 38 வயது உடைய இருவர் அதிரடியாக கைது செய்தனர்.இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார தெரிவிக்கையில்,சாமி மலை கவரவலை தோட்ட பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன இது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டு இருந்த வேளையில் கடந்த 21 ம் திகதி சுமார் 18 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் எரிவாயு வெற்று சிலிண்டர் போன்ற பொருட்கள் களவாட பட்டு உள்ளது என கிடைக்க பெற்ற புகாரைத் தொடர்ந்து தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.கொள்ளை இடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இன்று 25 ம் திகதி திங்கட்கிழமை ஹட்டன் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement