• May 20 2026

கிண்ணியாவில் நீரில் மூழ்கிய இரு பாலங்கள்!

shanu / Nov 30th 2025, 10:38 am
image


சீரற்ற கால நிலையின் தாக்கம் காரணமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம்,குறிஞ்சாக்கேணி பாலங்களின் மேலாக இரவு முதல் (29) வெள்ள நீர் ஊடறுத்துப் பாயத் தொடங்கி நீர் பரவுகிறது. 


இதனால் தரைவழிப் போக்குவரத்து தடைப்பட்ட நிலையிலும் அத்திதவசிய தேவை கருதி கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் குட்டிக்கராச்சி பாலம் ஊடாக கிண்ணியா நகர சபையின் ஏற்பட்டில் டெக்டர் இயந்திரம் மூலமான போக்குவரத்து இடம் பெற்று வந்த போதும் நீர் மட்டம் உயர்வடைந்ததால் தடைப்படலாம் என கூறப்பட்டுள்ளது. 


அத்தியவசிய தேவை ஏற்பட்டால் படகு சேவை இடம் பெறும் என கூறப்படுகிறது.குறித்த கரையோரங்களை அண்டிய பகுதிகளின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 


இது தொடர்பில் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி கருத்து தெரிவிக்கையில்  மகாவலி கங்கை வழியாக நீரின் அளவு வெளியேற்றம் காரணமாக கண்டல் காடு தீனேறி பகுயாக வரும் நீர் தற்போது குட்டிக்கராச்சி பாலத்தை நோக்கி வருவதனால் நீர் பரவி வருகிறது. 


 எனவே பொது மக்கள் தேவையற்ற விதத்தில் பயணம் செய்ய முயற்சிப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.


கிண்ணியாவில் நீரில் மூழ்கிய இரு பாலங்கள் சீரற்ற கால நிலையின் தாக்கம் காரணமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம்,குறிஞ்சாக்கேணி பாலங்களின் மேலாக இரவு முதல் (29) வெள்ள நீர் ஊடறுத்துப் பாயத் தொடங்கி நீர் பரவுகிறது. இதனால் தரைவழிப் போக்குவரத்து தடைப்பட்ட நிலையிலும் அத்திதவசிய தேவை கருதி கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் குட்டிக்கராச்சி பாலம் ஊடாக கிண்ணியா நகர சபையின் ஏற்பட்டில் டெக்டர் இயந்திரம் மூலமான போக்குவரத்து இடம் பெற்று வந்த போதும் நீர் மட்டம் உயர்வடைந்ததால் தடைப்படலாம் என கூறப்பட்டுள்ளது. அத்தியவசிய தேவை ஏற்பட்டால் படகு சேவை இடம் பெறும் என கூறப்படுகிறது.குறித்த கரையோரங்களை அண்டிய பகுதிகளின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இது தொடர்பில் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி கருத்து தெரிவிக்கையில்  மகாவலி கங்கை வழியாக நீரின் அளவு வெளியேற்றம் காரணமாக கண்டல் காடு தீனேறி பகுயாக வரும் நீர் தற்போது குட்டிக்கராச்சி பாலத்தை நோக்கி வருவதனால் நீர் பரவி வருகிறது.  எனவே பொது மக்கள் தேவையற்ற விதத்தில் பயணம் செய்ய முயற்சிப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement