• Jun 14 2026

குடும்பத் தகராறால் விபரீதம்; மனைவி கொடூரமாக கொலை! கைதான கணவன் திடீர் மரணம்

Chithra / Jun 11th 2026, 11:01 am
image

குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்று சோகமான முடிவை எட்டிய நிலையில், கணவனால் தாக்கப்பட்டு  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


படிவெல பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையில் நேற்று (10) காலை ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, 59 வயதுடைய கணவர் தனது 61 வயதுடைய மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கணவர் பிங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். எனினும், கைது செய்யப்பட்ட வேளையில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் பிங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குடும்பத் தகராறால் விபரீதம்; மனைவி கொடூரமாக கொலை கைதான கணவன் திடீர் மரணம் குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்று சோகமான முடிவை எட்டிய நிலையில், கணவனால் தாக்கப்பட்டு  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.படிவெல பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையில் நேற்று (10) காலை ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, 59 வயதுடைய கணவர் தனது 61 வயதுடைய மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கணவர் பிங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். எனினும், கைது செய்யப்பட்ட வேளையில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் பிங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement