• May 21 2026

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை பாடசாலை வீதி - சிரமத்தை எதிர் நோக்கும் பாடசாலை மாணவர்கள்!

Ziya / Nov 26th 2025, 5:20 pm
image

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயல பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/பாதிமா பாலிகா வித்தியாலயத்துக்கு செல்லும் வீதியானது கனமழை காரணமாக மூழ்கியதால் இன்று (26)பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். 

குறித்த பாடசாலைக்கு செல்லும் வீதியானது நீரினால் மூழ்கடிக்கப்பட்டதால் பாடசாலை மாணவர்கள் மழையையும் வெள்ள நீரையும் பாராது குறித்த வீதி ஊடாக நீரில் நனைந்து பாடசாலைக்கு சென்று வீடு திரும்பினர்.

மேலும் கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததுடன் மின்சார கம்பிகளும் தடைப்பட்டதுடன் போக்குவரத்தும் சில மணி நேரம் தடைப்பட்டது. 

பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்ப பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் இணைந்து  செயற்பட்டனர்.

முள்ளிப்பொத்தானை, 4ம் வாய்க்கால் பாலம்போட்டாறு உட்பட தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

குறித்த பகுதியின் மேலதிக நீரை வெளியேற்ற தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி மற்றும் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி களத்துக்கு சென்று உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை பாடசாலை வீதி - சிரமத்தை எதிர் நோக்கும் பாடசாலை மாணவர்கள் திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயல பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/பாதிமா பாலிகா வித்தியாலயத்துக்கு செல்லும் வீதியானது கனமழை காரணமாக மூழ்கியதால் இன்று (26)பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். குறித்த பாடசாலைக்கு செல்லும் வீதியானது நீரினால் மூழ்கடிக்கப்பட்டதால் பாடசாலை மாணவர்கள் மழையையும் வெள்ள நீரையும் பாராது குறித்த வீதி ஊடாக நீரில் நனைந்து பாடசாலைக்கு சென்று வீடு திரும்பினர்.மேலும் கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததுடன் மின்சார கம்பிகளும் தடைப்பட்டதுடன் போக்குவரத்தும் சில மணி நேரம் தடைப்பட்டது. பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்ப பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் இணைந்து  செயற்பட்டனர்.முள்ளிப்பொத்தானை, 4ம் வாய்க்கால் பாலம்போட்டாறு உட்பட தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த பகுதியின் மேலதிக நீரை வெளியேற்ற தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி மற்றும் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி களத்துக்கு சென்று உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement