• May 07 2026

தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவரை மோதித்தள்ளிய ரயில்; முருகண்டியில் பலியான உயிர்

Chithra / May 7th 2026, 11:04 am
image

கிளிநொச்சி - முருகண்டி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயில், தண்டவாளத்தில் அமர்ந்திருந்த குறித்த நபரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இச் சம்பவம் நேற்று இரவு சுமார் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்தவரின் சடலம் பின்னர் ரயில் மூலம் அறிவியல் நகர் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.


இந்நிலையில், உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், அவரது சடலம் தற்போது கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவரை மோதித்தள்ளிய ரயில்; முருகண்டியில் பலியான உயிர் கிளிநொச்சி - முருகண்டி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயில், தண்டவாளத்தில் அமர்ந்திருந்த குறித்த நபரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று இரவு சுமார் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவரின் சடலம் பின்னர் ரயில் மூலம் அறிவியல் நகர் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், அவரது சடலம் தற்போது கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement